வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 253
“முடிவில், சக்தா வஹி சைவஹ சபாமத்யேச வைஷ்ணவஹ.”
“சபாமத்யர்கள் வைஷ்ணவர்களா?”
“அப்படித்தான் ஆகவேண்டியதிருக்கிறது மகராஜ். நாங்கள் உங்களைப் போல மற்றவர்களின் வாயை மூட முடியுமா?”
“சமயம் போல் வேஷமிடும் நீங்கள் பலே-ஆட்கள்தான்.”
“மகராஜ் இது மட்டுமல்ல; பகவான் புத்தரையும் வணங்குகிறேன்.”
“புத்த பகவானையா?”
“ஆம்.”
“சே! இந்த இடத்திலே அந்தப் புனிதனின் பெயரை எடுக்காதே.”
“மகராஜ்! வஜ்ரயான்* சாக்தர்களாகிய எங்களுக்கும் புத்தரை வணங்க வழி திறந்து விட்டிருக்கிறது.”
“சரியாகச் சொன்னாய் நண்ப; இதனால்தான் அதைச் சுலபமான வாகனம் என்று சொல்லுகிறார்கள்.”
“இந்த வஜ்ரயானி சித்தர்களின் பாடல்கள், கீதங்களில் கவிதா நயம் ஏதும் எனக்குத் தென்படவில்லை. ஆனால் அவர்கள் ஐந்து பொருள்களை (மது, மாமிசம், மீன், பணம், உடல் உறவு) அனுமதிப்பதின் மூலம் ஜனங்களுக்குச் செய்துள்ள நன்மைக்கு, நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.”
“ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த ஐந்து பொருள்களையும் போற்றுவது முடியாத காரியமாய் இருக்கிறது.”
“இந்த வஜ்ரயானோடு கூட, நாகார்ச்சுனனின் தத்துவமும் சேர்ந்தால் பொன்மலர் மணம் பெற்றது போலாம்.”
“உன்னுடைய காவியத்தின் சுவையை எப்படியோ ரசித்து விடுகிறேன். அதிலும் கூட சில இடங்களில் என் தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால் இந்தத் தத்துவமிருக்கிறதே அது தலை மீது பாறாங்கல்லை வைத்தது போல் அழுத்தவே செய்கிறது.”
“ஆனாலும் மகராஜ்! நாகார்ச்சுனனுடைய தத்துவம் மிகவும் உபயோகமுள்ளது. அது அநேக போலிக் கருத்துக்களைப் போக்கடித்து விடுகிறது.”
“ஆனால், நீ பெரிய வேதாந்தியாயிற்றே?”
“நான் எனது நூல்களை வேதாந்தம் என்று சொல்லியே வெளியிட்டேன். ஆனால், “கண்டண கண்ட காத்தியம்” என்ற நூலை நாகார்ச்சுனனுடைய பாத தூளியைச் சிரமேற்கொண்டே எழுதி முடித்தேன்.”
“இவைகளையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது
____________________________________________________
* வஜ்ரயான்: பௌத்த மதத்தின் மூன்று கிளைகளுள் ஒன்று. காலத்தால் பிற்பட்டது. மது மாமிச பட்சணத்தையும் பணப்புழக்கம், குடும்ப வாழ்க்கை இவைகளையும் அனுமதிப்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 253, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, “ஆனால், நாகார்ச்சுனனுடைய, ஐந்து, விடுகிறது, போல், சிறந்த, மகராஜ், “மகராஜ், “இந்த