வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 208
பேசினாள். ஆயினும் வார்த்தைகள் தெளிவாக இருந்தன.
“இந்த நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது! பிரபா எங்கே மகனே?”
அந்தச் சமயத்திலே அஸ்வகோஷின் காதுகளிலே ‘என்னைச் சரயூவின் அலைகள் அழைக்கின்றன என்ற பிரபாவின் சொற்கள் எதிரொலித்தன. அவன் திடுக்குற்றான்.
“அவள் தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மாலை வரை இங்கு தானே அம்மா இருந்தாள்.”
“பிரபா என் மகளே! நல்லது மகனே! அவளை எப்பொழுதும் மறந்துவிடாதே...”
அவள் வார்த்தைகளை முற்றிலும் முடிக்கவிடவில்லை. இருமல் வந்துவிட்டது. சிறிது நடுக்கம் உடலிலே ஏற்பட்டது. உயிர் உடலை விட்டுப் போய்விட்டது. அவள் புதல்வனின் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது. இரவெல்லாம் அழுதுகொண்டே இருந்தான்.
மறுநாள், தாயின் தகனக் கிரியைகள் யாவும் முடிவு பெற நடுப்பகலாகி விட்டது. அதன் பிறகு, பிரபாவைத் தேடிக்கொண்டு தத்தமித்திரரின் வீட்டுக்குச் சென்றான் அஸ்வகோஷ். பிரபா அஸ்வகோஷுடன் இருப்பதாக அவள் தாய் தந்தையார் நினைத்துக் கொண்டிருந்தனர். இரவு விழுந்த அடியே அஸ்வகோஷின் இதயத்தைச் சிதிலமடையச் செய்துவிட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து இப்பொழுது விழப்போகும் அடி! அவளுடைய படுக்கையறையில் சென்று பார்த்தான். அங்கு எல்லாச் சாமான்களும் ஒழுங்காக
வைக்கப்பட்டிருந்தன. கட்டிலின் மீது விரித்திருந்த வெள்ளை விரிப்பு நலுங்காமல் இருந்தது. அதை எடுத்துவிட்டுப் பார்த்தான். அங்கே அவனுடைய படமும் ஒரு ஓலையும் இருந்தன. அந்தப் படம் ஒரு சிறந்த கிரேக்க சைத்திரிகனைக் கொண்டு, பிரபா தனக்காக எழுதச் செய்தது. தனக்கு விருப்பமில்லாவிட்டாலுங் கூட அவளுடைய ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக அந்தச் சைத்திரிகனின் முன்னால் அஸ்வகோஷ் பல மணிநேரம் உட்கார்ந்திருந்திருக்கிறான். படத்தோடு இருந்த கடிதத்திலே, முத்திரை வைப்பதற்காக ஒட்டப்பட்டிருந்த கறுப்பு மண் இன்னும் காயவில்லை. முத்திரை உடைந்து விடாமல் அக் கறுப்பு மண்ணை அப்படியே எடுத்து வைத்துக் கொண்டு, ஓலையைப் பிரித்துப் படித்தான். “காதல! பிரபா உன்னிடம் விடை பெற்றுக்கொள்கிறாள். என்னைச் சரயூவின் அலைகள் அழைக்கின்றன நான் போகிறேன். நீ எனக்குக் காதல் பரிசாக ஒரு வாக்குக் கொடுத்திருக்கிறாய்; அதை மறந்துவிட மாட்டாயே? பிரபா தனது அழிவற்ற இளமையை - என்றும் மாறாத அழகை, உன்னிடம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 208, பிரபா, புத்தகங்கள், கொண்டு, அவள், அஸ்வகோஷின், அவளுடைய, பக்கம், சிறந்த, வால்காவிலிருந்து, கங்கை, அழைக்கின்றன, அஸ்வகோஷ், கறுப்பு, உன்னிடம், அலைகள், முத்திரை, பார்த்தான், இருந்தன, தாயின், மேல், இதயம், தாய், அந்தச், மகனே, சரயூவின்