வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 20
வழிகூடிச் செல்லும் இந்தக் காட்டு மனிதர் கூட்டங்களுக்கு, அவர்களுடைய வீடு இன்னும் வெகு தூரத்தில் இருப்பது தெரியும். வேகமாக நடக்கின்றனர். ஆயுதம் ஏந்திய கையினளாய், அந்தத் தாய் தலைமை தாங்கியாவருக்கும் முன்னே நடக்கிறாள். இரவானதால் நாலா பக்கங்களிலும் தன்னுடைய கண்களின் பார்வையை விட்டெறிந்து கூர்மையாக நோக்கிய வண்ணம் நடந்து கொண்டிருக்கிறாள். ஓர் இடத்தில் திடீரென்று நின்ற அவள், காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள். ஏனையோர் மௌனமாக நிற்கின்றனர். இந்த நேரத்தில் பதினாறு வயதுள்ள பெண் இருபத்தாறு வயதுள்ள வாலிபனிடம் “உர், உர், ப்ரூக், ப்ரூக்” என்று கத்தினாள். தாயும், தன்னுடைய தலையை ஆட்டிக்கொண்டு, “உர், உர், ப்ரூக், ப்ரூக்” என்று சத்தமிட்டு, ‘அதிகம் அதிகம் யாவரும் ஜாக்கிரதை’ என்று ஜாடை காட்டி ஆவேசத்தோடு அலறினாள்.
தூக்கி வந்த சவங்கள் தோள்களிலிருந்து இறக்கப்பட்டன. உடனே யாவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை ஏந்தி, முதுகுக்கு முதுகு தொடும்படியாக வட்ட வடிவில் வியூகம் வகுத்து திசைகள் தோறும் நோக்கியவர்களாய்
நின்றனர்; சிறுவன் வியூகத்துக்கு நடுவில் நிற்கிறான். கொஞ்ச நேரத்தில், ஏழெட்டு ஓநாய்கள், தங்களுடைய நீளமான நாக்குகளைத் தொங்க விட்டுக் கொண்டும், “உர் உர்” என்று கத்திக்கொண்டும், இந்த மனித மிருகக் கூட்டத்தின் வியூகத்தைச் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தன. இவர்களுடைய கைகளிலுள்ள ஆயுதங்களைப் பார்த்த அந்த ஓநாய்கள் யுத்தம் ஆரம்பிப்பதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்பன போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் வியூகத்தின் நடுவே நின்ற பதினான்கு வயதுச் சிறுவன், தன்னுடைய நீண்ட தடியோடு சேர்த்துக் கட்டியிருந்த கம்பை எடுத்து அதில் தோல் கயிற்றைக்கட்டி அதை ஒரு முறுக்கேற்றிய வில்லாக்கி, எங்கே தான் மறைத்து வைத்திருந்தானோ ஒரு கூர்மையான கல் அம்பு, அதையும் வில்லையும் வட்டத்தில் நிற்கும் இருபத்துநான்கு வயதுடைய ஆடவனின் கையில் கொடுத்து அவனை வியூகத்தின் நடுவே தள்ளிவிட்டு, அவனுடைய ஸ்தானத்தில் தான் நின்று கொண்டான். இருபத்து நான்கு வயதுடைய ஆடவன் தன்னுடைய வில்லில் நாணேற்றி, கல் அம்பைப் பூட்டி வியூகத்தின் நடுவே நின்ற வண்ணம் குறி வைத்து ஓர் ஓநாயின் மீது ஏவினான். அந்தப் பாணம் அதன் ஒருபுறத்து விலாப்பக்கத்தில் பாய்ந்துவிட்டது. உடனே கீழே விழுந்த அந்த ஓநாய், சமாளித்துக் கொண்டு வியூகத்தின் மீது பாய ஆரம்பித்ததோ இல்லையோ அவன் மற்றொரு பாணத்தையும் அதன்மீது ஏவிவிட்டான். இந்த அம்பு சரீரத்தில் பெரிய காயத்தை மாத்திரமா உண்டுபண்ணியது? அதனுடைய உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது. பிணமாக விழுந்த அந்த ஓநாயின்
சரீரத்திலிருந்து வழிந்தோடும் ரத்தத்தை மற்ற ஓநாய்கள் நக்கிக்கொண்டும் கடைசியில் அதைக் கிழித்துத் தின்னவும் ஆரம்பித்து விட்டன.
இந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்த மாக்கள்(மனித மிருகங்கள்) தங்களுடைய வேட்டைப் பொருளை தோள்களில் தூக்கிக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 20, புத்தகங்கள், நேரத்தில், வியூகத்தின், தன்னுடைய, அந்த, நின்ற, “உர், பக்கம், வண்ணம், வால்காவிலிருந்து, கங்கை, ஓநாய்கள், நடுவே, தங்கள், சுற்றிச், சுற்றி, அம்பு, மீது, விழுந்த, ஓநாயின், வயதுடைய, மனித, தான், ப்ரூக்”, பூமி, கொஞ்ச, இன்னும், சிறந்த, கீழே, வயதுள்ள, சிறுவன், உடனே, யாவரும், ப்ரூக், தங்களுடைய