வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 175
“முதலாவது அடிமை வழக்கம். அது எங்கள் நாட்டிலும்கூட இருந்தது. அடுத்தபடியாக சக்ரவர்த்தியுடையவும் பணக்காரர்களுடையவும் அந்தப்புர வாழ்க்கை.”
“ஏன், அது உங்கள் நாட்டில் கிடையாதா?”
“எங்கள் நாட்டில், மெக்டோனியா அரசன் பிலிப் கூடப் பல பெண்களை மணந்து கொள்ள முடியாது. ஆனால் இங்கோ, சாதாரண அரசாங்க உத்தியோகஸ்தர்கள்கூட பல மனைவிகளை உடையவர்களாய் இருக்கிறார்கள்.”
“சோபியா! எங்களுடைய நாட்டிலும் பலதார மணம் எப்பொழுதாவது
நடப்பது உண்டு. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்தப் பலதார மணம், பெண்களின் அடிமைத்தனத்திற்கு ஓர் அறிகுறி என்பதுதான் என்னுடைய எண்ணம். ஏதென்ஸ் அடிமை வழக்கத்தை அனுமதித்திருக்கிறதென்றால், தட்சசீலம் பலதார மணத்தை அனுமதிப்பதன் மூலம், அடிமை வழக்கத்திற்கு வழி திறந்து விட்டது.”
“மேலும் சமூகத்தில் சிலரிடத்திலே மட்டும் ஏராளமான செல்வம் குவிவதைப் பற்றி?”
“விஷ்ணுகுப்தனிடம் இதைப் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். ஜன ஆட்சி நாட்டில், யாரிடம் எவ்வளவு செல்வம் பெருகினாலும், அவர்கள் அரசர்களைப் போல் செல்வத்தைத் தண்ணீராக ஓடவிட மாட்டார்கள். நீ இங்கு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய் சோபியா! மெல்லிய மான் தோல்கள், உயர்ந்த ஆடைகள், ரத்தினங்கள், மணிகள், முத்து முதலிய பொருள்கள் இங்கு எப்படி உபயோகிக்கப்படுகின்றன! இந்த ரோஜாக் கன்னங்களும் செவ்விதழ்களும் தங்களுக்காக இந்தப் பொருள்களைத் தயாரிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பட்டினி கிடந்து வாடுகிறார்கள் என்பதைப் பற்றி நினைப்பதே இல்லை.”
“நாகா! நம்முடைய வீடுகளிலே விழுகின்ற தண்ணீரையெல்லாம் இழுத்துக் கொண்டுதான் சமுத்திரம் பெருத்த நீர்ப்பெருக்காய்க் காட்சியளிக்கிறது.”
“மண்ணைக் குடைந்து தங்கம் எடுப்பவர்கள் பட்டினியால் மடிகிறார்கள்.
ஆனால் தங்கத்தை மண்ணாக்குபவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். நான் மூன்று முறை சக்கரவர்த்தியின் முன்னால் போயிருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் தலைவேதனையோடு தான் திரும்ப வந்திருக்கிறேன். குளிரிலே நடுங்கி வெயிலிலே காய்ந்து மடிகின்ற கோடிக் கணக்கான தொழிலாளிகளின் பெருமூச்சைச் சக்கரவர்த்தியின் ஆடம்பரப் பொருள்களிலே கேட்டேன். அவர் குடிக்கும் சிவப்பு மது, ஒடுக்கப்பட்ட பிரஜைகளின் ரத்தம் போல் எனக்குத் தோன்றிற்று. இந்த பெர்ஸபோலி நகர வாழ்க்கை எனக்குக் கசந்து விட்டது. சீக்கிரமே இங்கிருந்து ஓடிவிட விரும்புகிறேன்.”
“எங்கே போக விரும்புகிறாய், நாகா?”
“முதலில் உன்னுடைய விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 175, புத்தகங்கள், அடிமை, பக்கம், நாட்டில், பலதார, வால்காவிலிருந்து, கங்கை, பற்றி, நான், போல், இங்கு, சக்கரவர்த்தியின், செல்வம், இந்தப், வாழ்க்கை, கொள்ள, மணம், சிறந்த, விட்டது