வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 116
அபாலாவின் இந்தக் களங்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட சுதாஸின் இதயம், அவனையே வெறுக்கத் தொடங்கிற்று. தன்மீது தன் மனத்திலேயே தோன்றிய அந்த வெறுப்பு உணர்ச்சியை அவனால் கடைசி வரை போக்கவே முடியவில்லை. தாய் தந்தையரைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவதாக ஜேதாவிடமும் அபாலாவிடமும் விடை பெற்றுக் கொண்டான். விரைவில்
திரும்பிவிட வேண்டும் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்ட அவர்களும் அனுமதியளித்தனர்.
அவன் புறப்படுவதற்கு முதல்நாள் முழுநேரத்தையும் அபாலா அவனுடனேயே கழித்தாள். காதலர் இருவருடைய கண்களும், கண்ணீரை உதிர்த்துக் கொண்டே இருந்தன. அதை அவர்கள் மறைக்கவும் முயலவில்லை. இருவரும் மணிக்கணக்கிலே தழுவியபடியோ முத்தமிட்டபடியோ தங்களை மறந்திருந்தனர். அவன் புறப்பட்ட சமயத்தில் அவனை மார்போடு தழுவிக்கொண்டு “சுதாஸ், நான் உனக்காக இந்த மத்ர புரியிலே வழி பார்த்துக் காத்திருப்பேன்” என்றாள் அவள்.
அவளுடைய அந்த வார்த்தை, சுதாஸின் ஆயுட்காலம் முழுவதும் அவனுடைய இதயத்திலே ஆழமாகத் தோண்டப்பட்டிருந்தது.
3
சுதாஸு க்குத் தன்னுடைய தாயிடத்தில் அளவு கடந்த அன்புண்டு. அவனுடைய தந்தை திவோதாஸ் ஒரு புகழ் பெற்ற அரசன். *வசிட்டன், விஸ்வாமித்திரன், பரத்துவஜன் போன்ற மகரிஷிகள் அவனுடைய புகழைத் தங்கள் வேத மந்திரங்களிலே இணைத்துப் பாடியிருக்கிறார்கள். ருக் வேதத்திலே புகுத்தி விடுவதால் அந்த மந்திரங்களிலே நிறைந்துள்ள முகஸ் துதித் தன்மை மறைந்து விடமாட்டாது. சுதாஸ் அவனுடைய தாயின் மீதே அதிக வாஞ்சையுடையவன். தன்னுடைய தாயைப் போன்ற அநேக மனைவியர்களும், பல அடிமைப் பெண்களும் அரசன் திவோதாஸு க்கு உண்டு என்பது சுதாஸு க்குத்
தெரியும். அரசனது மூத்த மனைவி பாஞ்சால சிம்மாசனத்தின் வாரிசைப் பெற்றவள் என்பதற்காக அரசன் அவளிடம் சிறிது மரியாதை வைத்திருக்கிறான் என்றாலும் அழகிய யுவதிகள் நிறைந்த அந்தப்புரத்திலே வசிக்கும் அரசன் இந்தப் பல்லு போன கிழவியிடம் எப்படி அன்பு செலுத்துவான்? சுதாஸ் அவனுடைய தாயாருக்கு ஒரே மகனானாலும், தந்தைக்கு ஒரே மகனல்ல. அவன் இல்லாவிட்டால், திவோதாஸின் வாரிசாவதற்குப் பிரதர்தன் தயாராயிருக்கிறான்.
வருடங்கள் பல கழிந்துவிட்டதால், மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையை இழந்து விட்டாள் சுதாஸின் தாய். அழுது அழுது அவளுடைய கண்களின் ஒளியும் மங்கிவிட்டது. ஒருநாள் திடீரென்று யாருக்கும் சொல்லாமல் தன் தந்தையைக் கூடப் பார்க்காமல் நேராகத் தன் தாயின் முன்னே வந்து
____________________________________________________
*ருக்வேதம் 6-26-211-25.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 116, புத்தகங்கள், அவனுடைய, அரசன், அவன், அந்த, பக்கம், சுதாஸின், கங்கை, வால்காவிலிருந்து, அழுது, தன்னுடைய, தாயின், சுதாஸ், மந்திரங்களிலே, க்குத், பெற்றுக், “சுதாஸ், சிறந்த, உனக்காக, தாய், அவளுடைய, திரும்பி, சுதாஸு