வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 108
“வேறு ஒன்றுமில்லை. வெறும் வயிற்றிலே அதிகத் தண்ணீரைக் குடித்துவிட்டது தான் காரணம். ஆனால் இப்பொழுது சரியாகி விட்டது.”
“வெறும் வயிறா?” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய பதிலை எதிர்பாராதவளாய் ஓடோடியும் தன் வீட்டிற்குச் சென்று, ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், மா, மது முதலியவைகளுடன் திரும்பிவந்து, அவற்றை அவன் முன் வைத்தாள். வாலிபன் முகத்தில் கூச்சமும் வெட்கமும் கலந்து தோன்றின. அதைப் பார்த்த யுவதி. கூச்சப்படாதே. என்னுடைய சகோதரனும் இந்த மாதிரியே வீட்டைவிட்டுப் போய்ச் சில வருஷங்கள் ஆகின்றன. உனக்கு நான் இவற்றைக் கொண்டு வரும்போது. என்னுடைய சகோதரன் ஞாபகமே எனக்கு ஏற்பட்டது.”
யுவதி வாளியில் கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தாள். தயிர் முதலியவற்றை வாலிபன் அருந்தினான். அவனுடைய களைப்புற்றிருந்த முகம் மலர ஆரம்பித்தது. அந்த யுவதியின் எதிர்பாராத உதவிக்காக நன்றி செலுத்தும் பொருட்டு, தன்னுடைய வாயைத் திறந்தான். அவனுடைய முகக்குறிப்பைத் தெரிந்துகொண்டு யுவதி, “கூச்சப்படுவதற்கு அவசியமே இல்லை. உன்னைப் பார்த்தால் நீ வெகு தூரத்திலிருந்து வருவதுபோல் தெரிகிறது” என்றாள்.
“ஆம். ரொம்பத் தூரத்திலிருந்து - பாஞ்சாலத்திலிருந்து.”
“இங்கு எங்கே போக வேண்டும்?”
“இன்ன இடத்திற்கு என்பதில்லை. எங்கோ போகிறேன்.”
“அப்படியானால்?”
“எந்த இடமாயிருந்தால் என்ன? என்னுடைய உடைக்கும், உணவிற்கும் பிறரை எதிர்பார்க்கக் கூடாது. ஏதாவது வேலை வேண்டும். அவ்வளவே.”
“வயல்களிலே வேலை செய்ய முடியுமா?”
“ஏன் முடியாது? உழுக, விதைக்க, கதிர் அறுக்க எல்லாம் தெரியும். பசுக்கள், குதிரைகள் இவற்றை மேய்க்க முடியும். என்னுடைய சரீரத்திலே போதிய சக்தி இருக்கிறது. ஆனால் இப்போது இந்தச் சக்தி வாடியிருக்கிறது. இருந்தாலும் அது தேறிவிடும். இன்னும் சில நாளிலேயே எவ்வளவு வேலையையும் செய்ய முடியும். குமாரி! நான் இதுவரை எந்த எஜமானனுக்கும் கோபம் வரும்படி நடந்து கொண்டதே இல்லை.”
“என்னுடைய தகப்பனார் உன்னை வேலைக்கு வைத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்வோம், நீயும் என்னுடன் வா.”
வாலிபன் தண்ணீர்ப் பையைத் தூக்கிச் செல்ல எவ்வளவோ முயன்றான்; யுவதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. வயல்களுக்கு மத்தியில் ஒரு சிகப்பு டேரா அடிக்கப்பட்டிருந்தது. அதற்கு வெளியில் சுமார் நாற்பது ஐம்பது ஆண் பெண்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் யுவதியின் தந்தை யார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 108, புத்தகங்கள், என்னுடைய, யுவதி, பக்கம், வால்காவிலிருந்து, வாலிபன், அவனுடைய, கங்கை, இல்லை, வேலை, செய்ய, முடியும், சக்தி, அதற்கு, வேண்டும், நான், தயிர், உனக்கு, சிறந்த, கொண்டு, யுவதியின், தூரத்திலிருந்து