வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 106
சுதாஸ்
தேசம் : குரு - பாஞ்சாலம் (ஐக்கிய மாகாணத்தின் மேற்குப் பாகம்)
ஜாதி : வேதகால ஆரியர்
காலம் : கி.மு. 1500
வசந்த காலத்தின் அந்தம், சனாப் (சந்திர பாகா) நதியின் மருங்கிலுள்ள விசாலமான பூபாகத்தில், கண்ணுக்கெட்டியவரை தங்கநிறத்தையொத்த கோதுமைக் கதிர்கள் காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் அந்தக் கோதுமைக் கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தனர். கதிர் அறுக்கப்பட்ட வயல்களிலே உள்ள புற்களை, அநேகம்
குதிரைகளும் அவற்றின் குட்டிகளும் மேய்ந்து கொண்டிருந்தன. வெய்யிலின் வெப்பம் வரவரக் கடுமையாகிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு வழிப்போக்கன் அந்த வயல்களினூடே மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தான். கிழிந்த துணியைச் சுற்றிக் கட்டியிருந்த தலைப்பாகை, பிடரியில் தொங்கி ஆடிக் கொண்டிருக்கும் செம்பட்டை நிறமான தலை ரோமங்கள், உடம்பிலே ஒரு பழமையான போர்வை, முழங்கால் அளவே தொங்கவிட்டுக் கட்டியிருக்கும் வேட்டி. கையிலே நீண்ட தடி, இந்தக் கோலத்தோடு மெதுவாகத் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தான். தாகத்தால் அவனுடைய தொண்டை வறட்சியடைந்து விட்டது. இருந்தாலும் அடுத்துத் தெரியும் கிராமத்திற்காவது போய்விட வேண்டுமென்று உறுதியோடு நடந்தான். ஆனால் வந்த வழியின் அருகே தென்பட்ட ஒரு மண் கிணற்றையும் வன்னி மரத்தின் தேய்ந்த நிழலையும் பார்த்ததும், அவனுடைய தைரியம் பறந்து விட்டது. அதற்கப்பால் ஓர் அடியும் எடுத்துவைக்க அவனால் முடியவில்லை. கிணற்றைக் குனிந்து பார்த்தான். தண்ணீரோ சமீபத்தில் இல்லை. தன் தலைப்பாகையைக் கழற்றி அந்த ஆடையின் ஒரு முந்தியைக் கையில் பிடித்துக் கொண்டு, மற்ற முந்தியைக் கிணற்றுக்குள் விட்டான். எட்டவில்லை. உடுத்தியிருந்த ஆடையைக் கழற்றி அதையும் சேர்த்து முடிந்து தொங்கவிட்டான். பாவம், அதுவும் தண்ணீரைத் தொடவில்லை. நம்பிக்கையிழந்து, வன்னி மரத்தின் நிழலிலே போய் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து நகரக்கூட முடியாதென்று அவனுக்குத் தோன்றிற்று. அந்தச்
சமயத்தில் ஒரு தோளிலே தண்ணீர்ப் பையையும் மற்றொரு தோளிலே கயிற்றையும் தொங்கவிட்டுக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 106, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, வன்னி, விட்டது, மரத்தின், முந்தியைக், தோளிலே, அவனுடைய, கழற்றி, நடந்து, கோதுமைக், சிறந்த, ஆடிக், கொண்டிருந்தன, கொண்டிருந்தான், அந்த, தொங்கவிட்டுக்