வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 100
நல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்கள் மலை நதிகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி, நிலங்களில் நீர் பாய்ச்சுவதற்கு நல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாம் காந்தாரத்தில் இவ்வழியைக் கடைப்பிடித்தோம். அவர்களுடைய நகர நிர்மாணம், வைத்தியம் முதலியவைகள் மிகவும் உயர்ந்த முறையில் இருந்தன. அவைகளையும் நாம் அப்படியே மேற்கொண்டோம். உணவு, உடை இன்னும் வாழ்க்கைத் தேவைக்கு உபயோகமான எத்தனை பொருள்கள், அல்லது விஷயங்கள் கிடைக்கின்றனவோ அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை பழமையானதா, புதுமையானதா, ஆரியர்களுடையதா அல்லது ஆரியரல்லாதவருடையதா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. சுவாத நதிக்கரை ஆரியர்களும் அவர்களுடைய முன்னோர்களும் பஞ்சாடையின் பெயரைக்கூடக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் இப்பொழுது அந்த ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம். வெயிற்காலத்தில் அது மிகவும் உபயோகப்படுகிறது.”
“ஆனால் எத்தனையோ பொருட்கள் முற்றிலும் நிராகரித்துவிட வேண்டியவைகளாக இருக்கின்றன. அசுரர்களுடைய லிங்க பூஜை நம்மைப் பொறுத்தவரை வெறுக்கத்தக்கது. அவர்களுடைய ஜாதிப் பிரிவினை நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியது. ஏனெனில் அந்தப் பிரிவினையால் சமூகத்தில் பிறந்த அத்தனைபேரும், தாங்கள் பிறந்த சமூகத்தைக் காப்பாற்றுவதற்கு ஆயுதம் ஏந்த முடியாமற் போகும். மேலும் தங்களுக்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மை வளரும். அசுரர்களோடு ரத்தக் கலப்பு நிச்சயமாகக் கூடாது. ஏனெனில் அது
நம்மையும் அசுரர்களாக்கி விடும். அதாவது ஆரியர்களும், தொழிற்பாகுபாடுள்ள பல ஜாதிகளாகப் பிரிந்து போவார்கள்.”
பாலமத்ரன்: “ரத்தக்கலப்பை ஆரியர்கள் யாவரும் வெறுக்கிறார்கள்.”
ரிஷி: “ஆம். ஆனால், அது விஷயத்தில் அவர்கள் அவ்வளவு ஜாக்கிரதையாய் இல்லை. அசுர அல்லது கோல்ஜாதிப் பெண்களோடு ஆரியர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா?”
வருணன்: “எல்லைப் புறத்தில் இருக்கும் அசுர நகரங்களின் வேசையர்களிடம், ஆரியப் போர் வீரர்கள் அடிக்கடி செல்வதாகக் கேள்விப்படுகிறேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 100, நாம், நல்ல, புத்தகங்கள், சிறந்த, பக்கம், ஜாதிக், அவர்களுடைய, முடியாது, வால்காவிலிருந்து, கங்கை, அல்லது, ஆரியர்களும், பிறந்த, அசுர, ஆரியர்கள், கூடாது, ஏனெனில், ஏற்பாடு, ஆகையால், நான், இருந்தால், செய்திருக்கிறார்கள், மிகவும்