வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி
பதினான்காவது கதையின் காலம் கி.பி. 1200. அதன் அஸ்திவாரத்தை நைடதத்திலும், அக்காலத்துச் சிலாசாசனங்களிலும் தேடிக் காணலாம்.
பாபா நூர்தினிலிருந்து பின்னால் உள்ள 6 கதைகளும் 12ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தைக் குறிக்கும். அவற்றிற்குத் தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றை எதிர்ப்பவர்களும் அரியர்.
இந்தக் கதைகளின் முடிவுகளைப் பற்றி, ஆதாரபூர்வமாகத் தர்க்கம் செய்வது எனது சக்திக்கு அப்பாற்பட்ட காரியம். இவற்றின் கருத்தை ஏற்கவோ,
மறுக்கவோ செய்வதற்கு ராகுல்ஜியைப் போன்ற ஞானக் கடலாய் இல்லாவிட்டாலும், அவரை அடுத்துச் செல்வதற்குரிய ஞான மாணவனாகவாவது இருக்க வேண்டும். இந்தக் கதைகளை எழுதும்போது ராகுல்ஜியின் பேனா கற்பனையின் பலத்தால் ஓடவில்லை. பல வருடங்கள் முயன்று பெற்ற அறிவின் பலத்தால் ஓடிற்று.
அநேகப் பண்டிதர்கள் இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய முயலுகிறார்கள். ராகுல்ஜி வெறும் பண்டிதரல்ல; மகா மேதை. அவருடைய சிருஷ்டிக்குச் “சத்தியமே தர்மம்” என்ற மகத்தான உண்மையே அடிப்படையென்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
பதந்தானந்த
கௌசல்யாயன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி, புத்தகங்கள், பற்றி, இந்நூலைப், கங்கை, வால்காவிலிருந்து, பலத்தால், இந்தக், சிறந்த, உள்ள