வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி
அடுத்து வரும் புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்ற நான்கு கதைகளுக்கும் இலக்கிய ஆதாரமிருக்கிறது. வேதம், மகாபாரதம், பிரசித்தி பெற்ற பௌத்த கிரந்தமான அட்டகதா யாவும் இக்கதைகளுக்குப் பின் பலமாயிருக்கின்றன. சுதாஸ் என்ற கதைக்கு, ருக்வேதத்திலேயே முழுக்க முழுக்க ஆதாரமிருக்கிறது. பிரவாஹன் என்ற கதைக்கு சாந்தோக்ய உபநிஷதமும், பிருகதாரணய உபநிஷதமும் அஸ்திவாரமாய் அமைந்திருக்கின்றன. இக்கதைகள் கி.மு. 2000த்திலிருந்து கி.மு. 400 வரை உள்ள காலத்தின் சமுதாய வளர்ச்சியை விளக்குகின்றன.
ஒன்பதாவது கதை பந்துலமல்லன் (கி.மு. 790). இந்தக் கதைக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும் பௌத்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தைப் பற்றிப் பௌத்த நூல்களிலிருந்து கிடைக்கும் ஏராளமான செய்திகளை, இச் சிறுகதையிலே புகுத்த முடியாததால் அவற்றிற்கெனத் தனியே “சிம்ஹ சேனாதிபதி” என்ற ஒரு முழு நாவலையே எழுதியிருக்கிறார் ராகுல்ஜி.
பத்தாவது கதை நாகதத்தன். சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தைப் படியுங்கள். கிரேக்கர்களின் யாத்திரை வரலாற்றைப் படியுங்கள். இன்று காலேஜ்களிலே படிப்பிக்கப்படுகின்ற வின்ஸன்ட் ஸ்மித் எழுதிய சரித்திரத்தைப் படியுங்கள். இவைகளிலெல்லாம் நாகதத்தனின் மூலாதாரத்தைக் காண்பீர்கள்.
பதினோராவது கதையான பிரபா, கதை அம்சத்திலும் ஈடு இணையற்று விளங்குகிறது. அஸ்வகோஷ் எழுதிய புத்த சரித்திரமும், சௌந்தரியானந்தமும் இக் கதைக்கு ஆதாரங்கள். வின்டர் நிட்ஜ் எழுதிய “இந்திய இலக்கியத்தின் சரித்திர” மும் அதற்குப் பின்பலமாயிருக்கிறது.
பன்னிரண்டாவது கதையான சுபர்ணயௌதேயன் குப்தர் காலக்கதை. அழியாத புகழ்பெற்ற ரகுவம்ஸம், சாகுந்தலம், குமாரசம்பவம் என்ற காளிதாஸரின் நூல்கள் இக்கதைக்கே ஆதாரபூர்வமாய்ச் சாட்சி சொல்லுகின்றன.
பதின்மூன்றாவது கதையான துர்முகன் உண்மையிலேயே வீரனின் வில்லிலிருந்து விடுபட்ட கணைபோல் நமது நெஞ்சிலே ஆழமாகத் தைக்கிறது. என்ன செய்யலாம்? ஹர்ஷ சரித்திரமும், காதம்பரியும், சீன யாத்ரீகனான இத்சிங்கின் யாத்திரை வரலாறும், அக்கதையை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி, புத்தகங்கள், கதைக்கு, எழுதிய, இந்நூலைப், படியுங்கள், பற்றி, கதையான, வால்காவிலிருந்து, பௌத்த, கங்கை, முழுக்க, உபநிஷதமும், யாத்திரை, சரித்திரமும், நூல்களிலிருந்து, சுதாஸ், ராகுல்ஜி, ஹிந்து, சிறந்த, நான்கு, இந்தக், ஆதாரமிருக்கிறது, பிரவாஹன், யாவும்