சத்ய சோதனை - பக்கம் 60
எங்களிடையே நட்புமுறையில் ஏற்பட்ட கடைசிப் பூசல் இதுவே. எங்களுக்குள் இருந்த உறவை இது கொஞ்சமும் பாதித்து விடவில்லை. என் நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் காரணம், அவர் என்மீது கொண்டிருந்த அன்பே என்பதை நான் அறியமுடிந்தது. அந்த அன்பைப் போற்றவும் போற்றினேன். எண்ணத்திலும், செயலிலும் எங்களுக்குள் வேற்றுமை இருந்தது உண்மை என்றாலும், அவர் மீது நான் அதிக மதிப்புக் கொண்டேன்.
அதனால், எனக்காக அவர் கொண்டிருந்த கவலையைப் போக்கி விடவேண்டும் என்று தீர்மானித்தேன். இனி நாகரீகக் குறைவாக நடந்து கொள்ளமாட்டேன். சைவ உணவு விரதம் கொண்டிருப்பதால் என்னிடம் இருந்த குறைக்கு ஈடு செய்ய, நாகரீக சமூகத்திற்குத் தகுதியான மற்றக் காரியங்களையெல்லாம் அனுசரித்து ‘நாகரீகமாக நடந்து கொள்பவன் ஆகிவிட்டேன்’ என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதை என் முடிவு. இதற்காக ஆங்கிலக் கனவானாகவே ஆகிவிடுவதற்கு வேண்டிய அசாத்தியமான காரியங்களையெல்லாம் செய்ய முற்பட்டேன்.
பம்பாயில் தைத்த உடைகளையே தறித்துக் கொண்டிருந்தேன். அந்த உடை ஆங்கிலச் சமூகத்திற்குப் பொருத்தமானதன்று என்று எண்ணினேன். ராணுவக்கடற்படை ஸ்டோரில் புதிய உடை வாங்கினேன். பத்தொன்பது ஷில்லிங் விலையில் ஒரு ‘சிம்னி - பாட்’ தொப்பி வாங்கினேன். அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகமான விலை. லண்டனில் நாகரீக வாழ்க்கைக்கு மத்திய இடமான பாண்ட் தெருவில், மாலையில் போட்டுக்கொள்ளும் உடுப்பு ஒன்று வாங்கி பத்துப் பவுனை பாழாக்கினேன். உத்தமரும் உயர் குணம் படைத்தவருமான என் சகோதரருக்கு எழுதி கடிகார இரட்டைவட தங்கச் சங்கிலி ஒன்றை அனுப்பி வைக்கும் படியும் செய்தேன். கடையில் கட்டி விற்கும் கழுத்து ‘டை’ அணிவது நாகரீகத்திற்குச் சரியல்லவாகையால், ‘டை’ யை நானே கட்டிக் கொள்ளும் வித்தையையும் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் குடும்ப நாவிதர் எனக்கு க்ஷவரம் செய்து விடும்போது மாத்திரமே முகக் கண்ணாடியை பார்க்கும் ஆடம்பரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இங்கோ, ஒரு பெரிய கண்ணாடி முன்னால் நின்று, என்னைப் பார்த்துக் கொள்வதிலும், ‘டை’ யைச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 60, புத்தகங்கள், அவர், பக்கம், ‘டை’, அந்த, நான், சோதனை, சத்ய, செய்ய, நாகரீக, காரியங்களையெல்லாம், வாங்கினேன், எனக்கு, நடந்து, கொண்டிருந்த, சிறந்த, உணவு, என்னைப், எங்களுக்குள், ஒன்று, இருந்த, என்பதை