அர்த்தமுள்ள இந்துமதம் - வழிகாட்டும் ஞான குரு
ஆனால், ஞானிகள் அவ்வாறு சலனமுறுவார்களா? என்ற ஐயம் எனக்கே இருந்தது.
பற்று, பந்த பாசங்களில் ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்ட மனிதன், மறு கட்டத்தில் அனைத்தையும் வெறுத்துத் துறவியாகும் போது, முன்பு அவன் வளர்த்த விலங்கினங்கள் இடை இடையே வந்து சலனத்தைக் கொடுக்கின்றன.
அந்த சலனத்தை அவன் அறவே தவிர்ப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருந்தது.
காட்டுக்கு ஓடினாலும் வீட்டு நினைவு வருகிறது.
யார் வாழ்ந்தார்கள், யார் செத்தார்கள் என்று அறிந்து கொள்ளும் சபலம் அடிக்கடி எழுகிறது.
சொந்தத் தேவைகளில் இருந்து விடுபட்டார்களே தவிரப் பந்த விலங்குகள் பற்றிய பரிதாப உணர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.
யோகத்தில் குறுக்கிடும் ரோகம் இது.
போகி ரோகியாவதில் வியப்பில்லை; ரோகியான பின்போ, முன்போ யோகியாவதிலும் வியப்பில்லை.
அந்த யோக நிலையிலும் தியாக நிலை முழுமையடையாமலேயே ஜீவன் பிரிகிறது.
பல தத்துவ ஞானிகள், சித்தர்கள் கதை இதுதான்.
பட்டினத்தார், சிவவாக்கியர், பத்ரகிரியார் ஆகியோர் புலம்பி இருக்கும் புலம்பலில் இருந்தே ஞான நிலைக்குப் பிறகும் நோய் பிடித்திருந்த அவர்களுடைய மனோ நிலை தெளிவாகிறது.
அதனால்தான் பல்லாயிரக்கணக்கான துறவிகளைக் கண்ட இந்து மார்க்கம், உண்மைத் துறவிகள் என்று சிலரை மட்டும் கண்டு வணங்கிற்று.
பற்றற்றான் பற்றினையே பற்றிய அந்தத் துறவிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதே.
அத்தகைய துறவிகளைப் பாரத கண்டம் முழுவதுமே அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.
அத்தகு துறவிகள் இருவரைப் பெற்றிருப்பதற்காகத் தமிழ்நாடு பெருமை கொள்ளலாம்.
ஒருவர் காஞ்சிப் பெரியவர்கள்; இன்னொருவர் புதுப் பெரியவர்கள்.
இவர்கள் இருவரும் சமநிலையடைந்த ஞானத் துறவிகள்.
காஞ்சிப் பெரியவர்களைப் பற்றிப் பலர் நன்கு விளக்கமாக எழுதியுள்ளார்கள்.
ஆகவே, இந்தக் கட்டுரையின் தலை நாயகனாகப் புதுப் பெரியவர்களை நான் எடுத்துக் கொள்கிறேன்.
இயற்கையான சிவப்புக் கோடுகளின்றிச் செயற்கையாகச் சிவக்காத அழகிய பிரகாசமாக கண்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - வழிகாட்டும் ஞான குரு, புத்தகங்கள், வழிகாட்டும், துறவிகள், இந்துமதம், ஞான , அர்த்தமுள்ள, குரு, பற்றிய, நிலை, வியப்பில்லை, பெரியவர்கள், புதுப், இருந்து, காஞ்சிப், கண்டு, கட்டத்தில், சலனத்தைக், நான், சிறந்த, ஞானிகள், பந்த, அந்த, அவன், யார்