அர்த்தமுள்ள இந்துமதம் - லெளகீகம்
நகர மாந்தர் எங்களைப் பார்த்துத் திகைத்தார்கள்.
இப்போது, பனிக்காற்றை சுவாசித்தாலே எனக்கு முகம் வீங்கிக் கொள்கிறது.
காலங்களாலே பருவங்கள் மாறுகின்றன. பருவங்களாலே உடல் மனோநிலைகள் மாறுகின்றன. பொறுப்புகள் வருகின்றன.
நெஞ்சு நிறைய இருந்த நிம்மதி மெது மெதுவாகக் குறைந்து அந்த இடத்தில், துக்கமும் துயரமும் உட்காரத் தொடங்குகின்றன.
குரங்குகள் போல மரங்களில் தாவித் திரிந்த காலம் போய், யானையைப்போல ஒவ்வொரு படிக்கட்டிலும் காலை வைத்து பார்த்து இறங்க வேண்டிய நிலைமை வருகிறது.
இன்பத்துக்காக ஏங்கிய நெஞ்சு, இப்போது நிம்மதிக்காக ஏங்கத் தொடங்குகிறது.
லெளகீகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தனுக்குப் பொறாமையும் குறையத் தொடங்குகிறது.
சலனமும், சபலமும் ஆட்டிப் படைக்கின்றன.
எங்கே நிம்மதி என்று தேடச் சொல்கிறது.
சிலரை வீட்டை விட்டு ஓடச் சொல்கிறது.
சிலரைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
பகவான் ஸ்ரீபரமஹம்சர் வேறொன்றும் கூறுகிறார்:
`சில வேளைகளில் மதப் பற்றுள்ள பக்தர்களுடன் சில லெளகீகர்களும் என்னிடம் வருகின்றனர்.
லெளகீகர்களுக்கு மத விஷயமான சம்பாஷைணைகளில் விருப்பம் இருப்பதில்லை. ஈஸ்வரனைப் பற்றி பக்தர்கள் விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, இந்த லெளகீகர்கள் பொறுமை இல்லாமல் `எப்போது திரும்பிப் போவது? இன்னும் எவ்வளவு நேரம் இங்கு இருக்கப் போகிறீர்கள்?’ என்று ரகசியமாகக் கேட்கிறார்கள்;
பக்தர்கள், `கொஞ்சம் பொறு; போய்விடலாம்’ என்கிறார்கள். அவர்களோ, `அதுவரை நாங்கள் படகிலே உட்கார்ந்திருக்கிறோம்’ என்று போய் விடுகிறார்கள்.
`புறாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தால் அது பொறுக்கித் தின்ற தானியம், அதன் இரைப்பையில் இருக்கும். அது போலவே உலகப் பற்றுள்ளவனுக்கு அவனது விவகாரமே கழுத்தில் ஏறி நின்று கொண்டிருக்கும்.’
கைவிலங்கு, கால்விலங்குகளை மாட்டிக் கொண்ட பிறகு நிம்மதியற்ற நிலை என்பது எல்லாருக்கும் வந்தே தீருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே துன்பங்களை விலக்கிக் கொண்டு வருவது எப்படி என்பதை, `அர்த்தமுள்ள இந்து மதம்’ நான்காம் பாகத்தில் சொன்னேன்.
இப்போது லெளகீகர்கள் எந்தெந்த வழியில் நிம்மதியை நாடலாம் என்பதை விவரிக்க வருகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - லெளகீகம், புத்தகங்கள், இப்போது, லெளகீகம், இல்லாமல், இந்துமதம், அர்த்தமுள்ள, கொண்டிருக்கும், பக்தர்கள், லெளகீகர்கள், சொல்கிறது, என்பதை, நெஞ்சு, சிறந்த, மாறுகின்றன, நிம்மதி, போய், தொடங்குகிறது