அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரிடம் இறைவன் நடத்திய லீலை
கால், கைகள் கழுவுவதற்காக ஒரு செப்புக் கலயத்தில் தண்ணீரோடு வந்த நான், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
“ஆமாம் சுவாமி நான்தான் அது… என்ன வேண்டும்,” என்கிறேன்.
“எங்களுக்கு ஒன்றும் வேண்டாமப்பா, எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்கிறார்கள்.
அப்படிச் சொன்னார்களே தவிர, அவர்கள் கைகளிலே குழந்தை இல்லை.
“எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே குழந்தை?” என்கிறேன்.
“திருவொற்றியூரில் இருந்து வருகிறோம். குழந்தை திருவிடை மருதூரில் இருக்கிறது!” என்கிறார்கள்.
`என்ன இது! ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல்? திருவொற்றியூர் எங்கே? திருவிடைமருதூர் எங்கே?’ என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது…
“இந்தா! இந்தச் சேலையால் தொட்டில் கட்டு” என்று கூறி ஒரு பழைய சேலையைக் கொடுக்கிறார்கள்.
அந்தச் சேலையை நான் பிரித்து பார்க்கிறேன். அதில் சிதம்பரம் நடராஜன் கோயில் நந்தி உருவம் இருக்கிறது. அதைப்பார்த்து விட்டு அவர்களைப் பார்த்தால், அங்கே அவர்கள் இல்லை.
அங்கேயும், ஒரு நந்தி இருப்பது போல தெரிகிறது.
என்ன இது! கூத்தன் கூத்தாடுகிறானோ?
“ஐயா… ஐயா!” நான் கத்துகிறேன்.
“என்ன ஐயா?” என்று சிவகலை விழித்துக்கொள்கிறாள்.
நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பிறகு நடந்ததை அவளிடம் சொல்கிறேன். பிறகு, ஏதோ இது சிவ சோதனை என்று ஆறுதலடைகிறோம்.
மறுநாள் எனக்கு நிம்மதி இல்லை.
திருவொற்றியூரில் தொடங்கி, திருவிடைமருதூர் வரை யாத்திரை போகும்படி பரமன் பணிக்கின்றானோ என ஐயமுற்றேன்.
தாயிடம் இதைக் கூறினேன்.
“ஒற்றியூரானுக்குச் சாத்துவதற்கு ஒரு வைர மாலையும், வழிநெடுக உள்ள கோயில்களுக்குப் புலிக்காசு மாலைகளும் வாங்கிக் கொண்டு, மனைவியையும் அழைத்துக் கொண்டு போய்வா மகனே!” என்றார்கள்.
சிவகலை மகிழ்ந்தாள். திருத்தல விஜயம் என்றாலே எனக்கும் மகிழ்ச்சிதான்; நானும் மகிழ்ந்தேன்.
நாங்கள் இருவரும் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு புறப்படும் போது, எதிரிலே வந்த தமக்கை ஒரு `நல்ல சொல்’ சொன்னாள்:
“இவ்வளவு நாளாகப் பிறக்காத குழந்தை, திருவொற்றியூர் சென்றா பிறக்கப்போகிறது?” என்பதே அது.
அவளுக்கு மூன்று குழந்தைகள். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றால், எங்கள் சொத்தெல்லாம் `தன் குழந்தைகளுக்குத்தான்!’ என்று அவள் நினைத்தாள்.
நினைக்கட்டும்; பேசட்டும்; கூடப்பிறந்த ரத்தம்; குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
நாங்கள் புறப்பட்டோம்.
ரதம் போய்க்கொண்டே இருந்தது.
திடீரென்று சிவகலையின் முகம் வியர்ப்பானேன்?
நல்ல காற்றோட்டத்தில் வியர்ப்பானேன்.
நான் முகத்தைத் துடைத்து விட்டேன்.
“ஏதோ மயக்கம்” என்றாள் அவள்.
திடீரென்று அவள் மார்பகம் நனைந்தது.
ரதத்தை நிறுத்தினேன்.
காரணமில்லாமல் அவள் அழுதாள். கண்ணீரைத் துடைத்தேன். அப்போதும் அதே குழந்தை கத்தும் சத்தம்!
இதுவும் பிரமைதானா?
ரதத்தின் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு வெளியில் எட்டிப்பார்த்தேன்.
சாலை ஓரத்தில் ஓர் ஆலமரம்; அருகிலே ஒரு தொட்டில்; அதன் பக்கத்தில் ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும்; அவர்கள் முன்னாலே யாராவது காசு போடுவார்கள் என்று விரிக்கப்பட்ட துணி.
அவர்களை உற்றுப் பார்த்தேன். கனவிலே வந்த அவர்களே தான்!
சிவகலையை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்று, “ஐயா, நீங்கள் யார்?” என்றேன்.
“நாங்கள் திருவிடைமருதூர்” என்றார் அவர்.
எனக்கு மெய்சிலிர்த்தது.
தொட்டிலைப் பார்த்தேன். அதே சேலை, அதே நந்தி ஓவியம்!
நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். அவர் என்னைக் கைத்தாங்கலாக எடுத்தார்.
“குழந்தை….” என்று இழுத்தேன்.
“எங்களுடையதுதான், நீண்ட காலம் கழித்துப் பிறந்தது. வயிற்றுச் சோற்றுக்கே வழி இல்லை. இதை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? யாரோ பட்டினத்துச் செட்டியாம். அவனிடம் இதைக் கொடுத்தால் எடைக்கு எடை பொன் கிடைக்கும் என்று யாரோ கனவிலே சொன்னார்கள். நடந்தே வந்தோம்; பசி தாங்க வில்லை. யாசகத்துக்காகத் துண்டைக் கீழே விரித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்து விட்டோம்!” என்றார் அவர்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. எனக்கு அதைத் துடைக்க வேண்டும் போல் தோன்றிற்று. துடைத்தேன். என்ன அதிசயமோ, குழந்தை சிரிக்கிற சத்தம் கேட்டது.
பெரியவரையும் அவர் மனைவியையும் அழைத்துக் கொண்டு புகாருக்குத் திரும்பினேன்.
அது இறைவன் அனுப்பிய குழந்தை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
தத்து எடுக்கும் விழாவைப் பிரமாதமாக ஏற்பாடு செய்தோம்.
“வேறு ஜாதி குழந்தையை தத்து எடுப்பது செல்லாது” என்று தமக்கை வாதாடினாள்.
“தமக்கே வேண்டும்” என்றுதானே `தமக்கை’ நினைப்பாள்! தங்கையாக இருந்தால், `தன் கையில் உள்ளது போதும்’ என்று நினைப்பாள்.
இதை வேடிக்கையாகச் சொல்கிறேன், சாத்திரமன்று!
எங்கள் பங்காளிகள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், வேறு ஜாதிப் பிள்ளை என்பதில் எல்லோருக்கும் குறை இருந்தது.
துலாபாரம் நடத்தினோம்.
குழந்தை தன் எடையை விட அதிகமாகப் பொன்னை இழுத்தது. கடைசியில் திருவிடைமருதூர் கோயிலுக்காகச் செய்த காசு மாலையை அதில் போட்டோம். துலாம் சரியாயிற்று.
விழா முடிந்தது.
விடைமருதூரார் விடைபெற்றார்.
பையனுக்கு `மருதவாணன்’ என்று பெயரிட்டு வளர்த்தோம்.
தான் பெற்ற பிள்ளை போலவே சிவகலைக்கு அவன் தோன்றினான்; எனக்கும் அப்படியே.
பருவம் வந்தது; பையனைப் பள்ளிக்கு அனுப்பினோம்.
அப்பனுக்கு ஏற்றபடி பிள்ளையும் தப்பாமல் இருந்தான். அவனும் படிக்க மறுத்தான்.
`ஆண்டவனே! நீ நேரடியாகக் கொடுத்த பிள்ளையும் இப்படியா?’ என்று அவனை நொந்து கொண்டேன்.
பள்ளிக்கூடத்தில் குரு எல்லோரையும் கேள்வி கேட்டால், இவன் குருவைக் கேள்வி கேட்பானாம்!
`ஏண்டா ஒழுங்காகப் படிக்கவில்லை?’ என்று ஒரு நாள் அவனைக் கேட்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தாரிடம் இறைவன் நடத்திய லீலை, அவர், குழந்தை, நான், இல்லை, புத்தகங்கள், கொண்டு, அவள், இறைவன், எங்கள், என்ன, இந்துமதம், லீலை, எனக்கு, எங்கே, அர்த்தமுள்ள, பட்டினத்தாரிடம், நாங்கள், நந்தி, அழைத்துக், வந்த, நடத்திய , திருவிடைமருதூர், துடைத்தேன், திடீரென்று, `தன், சத்தம், குழந்தைகள், வியர்ப்பானேன், யாரோ, நினைப்பாள், வேறு, பிள்ளை, பிள்ளையும், கேள்வி, தத்து, என்பதில், கனவிலே, பார்த்தேன், தான், என்றார், தமக்கை, காசு, சிவகலை, என்கிறேன், என்கிறார்கள், திருவொற்றியூரில், இருந்து, வேண்டும், மனைவியும், சிறந்த, வயோதிக, பிராமணரும், இருக்கிறது, திருவொற்றியூர், இதைக், மனைவியையும், எனக்கும், காலில், சொல்கிறேன், பிறகு, தொட்டில், பார்க்கிறேன், அதில், விழுந்து