அர்த்தமுள்ள இந்துமதம் - சாதிகள்
சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும் பொழுது அந்த அமைப்பானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்து விடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், இலட்சியமான வகையில் அமையவேண்டிய ஒற்றுமைக்காகவும், மனித சமுதாயத்தினை நெறிப்படுத்தி அமைப்பதற்காகவே, சாதி முறையானது அமைக்கப்பட்டது.
மிகப் பெரியதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச் சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி முதல் முதலாக `புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது. மனித சமுதாயமானது பல்வேறு உறுப்புகளுடன் கூடிய ஒரு முழுமைப் பொருளாகவும், அதனுடைய ஒவ்வோர் அங்கமும் தனக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகப் பிற அங்கங்களும் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு உதவியும், பிற அங்கங்கள் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றி வரக்கூடிய காரணத்தால், தன்னுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களும் ஒன்றை மற்றது இயல்பாகச் சார்ந்து அமையும் வகையில் அமைந்துள்ளன.
இந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் முழுப் பொருளினுடைய தன்மையானது அதனுடைய பல்வேறுபட்ட அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்தும், முழுப் பொருளினுடைய நல் இயக்கத்திற்கு அதனுடைய பல்வேறு அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாததாகவும் உள்ளன. ஒரு சமூகத்தினுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வரக்கூடிய பல பிரிவுகளுடனும் கூடிச் சமூகங்கள் அனைத்தும் அமைந்து காண்கின்றன.
பல்வேறு பிரிவுகளும் பொதுவானதோர் இலட்சியத்தை எய்தும் வகையில் செயலாற்றக்கூடிய காரணத்தால், அவற்றினிடையே ஒற்றுமையுணர்வும் சமூக சகோதரத்துவமும் நன்கு மருவுகின்றன. முதல் பிரிவாகப் பண்பாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆன்மிகத்தின் உயர்வுக்காகவும் முதலாவது பிரிவில் ஈடுபட்டவர்களையும், இரண்டாவது பிரிவாகப் போர்த்துறையிலும் அரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களையும், மூன்றாவது பிரிவாகப் பொருளாதாரத் துறையிலும் வர்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டு உள்ளவர்களையும், நான்காவது பிரிவாகத் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் கொண்டு, சாதி அமைப்பானது அமைந்தது.
மனித வாழ்க்கையினுடைய பல்வேறு கடமைகளும் மிகத் தெளிவான வகையில் புகுத்தப்பட்டும், அவற்றினுடைய பிரத்தியேகமான இயல்புகளும், எவ்வகையில் அவை பிறவற்றுடன் ஒருங்கே இயங்கினால் அதன் விளைவாக நிறைவு காண முடியும் எனும் நோக்குடன், அவை ஒவ்வொன்றினுடைய சிறப்பியல்புகளும் தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குறிப்பாக `பணியும், கடமையும்’ அது அனுசரிக்க வேண்டிய நியதியும் அதற்கான தனிப்பட்ட பாரம்பரியமும் உள்ளன. உணவியல் பற்றியும், திருமண இயல் பற்றியும் சில முறைகளைக் கையாண்டும், ஓரளவு பரம்பரை பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் பல்வேறு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று இயைந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்து வரக்கூடிய ஒரு கூட்டு நிறுவனம் போன்றதுதான் சாதிமுறை அமைப்பு ஆகும். ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளுடைய ஈடுபாடும் தலையீடு மின்றித் தனிப்பட்ட வகையில் தம்முடைய இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் எய்தும் முயற்சியில் பூரண சுதந்திரத்துடனும், சுயேச்சையாகவும், இயங்குவதற்குக் கூடிய வழிவகைகள் உள்ளன. பல்வேறு சாதிகளிடையே பல்வேறுபட்ட கடமைகளும் முழு அமைப்பினுடைய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அனைத்தும் கருதப்பட்டன. வேத நூல்களில் காணக்கூடிய உயரிய கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூற வேண்டிய குருவினிடத்து காணப்பட வேண்டிய மனநிறைவும் அமைதியும், போர்க்களத்தில் சமர்புரியும் வீரனுடைய வீரமும் திறனும், வர்த்தக வாணிபத்தில் ஈடுபட்டுள்ளவருடைய மன நேர்மையும், தொழிலாளியின் பொறுமையுணர்வும் உழைப்புத் திறனும், இவையனைத்தும் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு வழிக்கோலுகின்றன. இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தொரு நிறைவு நிலை என்பது ஒன்று உண்டு”.
மேலே நீங்கள் படித்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய கருத்துரையாகும்.
`இந்து தர்மமும் வாழ்க்கையும்’ என்ற நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
அவரது தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடியாதவாறு, அந்த நூலை மொழிபெயர்த்தவர் கொடுமையான தமிழைக் கையாண்டிருக்கிறார். ஆயினும் அவருடைய தமிழையே நான் மீண்டும் மொழிபெயர்த்து ஓரளவு புரிந்து கொண்டேன்.
“சாதிப் பிரிவு என்பது நாட்டுக்குத் தேவையான நான்கு அம்சங்களைக் கொண்டது” என்கிறார் ராதாகிருஷ்ணன்.
1. ஆன்மிகத் துறை
2. அரசியல், போர்த்துறை
3. வாணிபம் தொழில்துறை
4. தொழில்களை இயக்கும் தொழிலாளிகள் துறை.
இவை பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ர என நான்கு வருணங்களாக அமைக்கப்பட்டன என்பது டாக்டர் ராதா கிருஷ்ணனின் வாதம்.
அவர் மட்டுமல்லாது, இந்துமதச் சான்றோர்களின் வாதமும் அதுதான்.
காழ்ப்புணர்ச்சியின்றி, ஆத்திரமின்றி, தத்துவ ரீதியாக இதை நாம் ஆராயவேண்டும்.
மேற்கண்ட நான்கு பிரிவுகளையும், சாதிப் பிரிவுகள் என்று அழைப்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
ஒவ்வொரு வருணத்துக்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆதலால், இந்த நான்கு பெரும் பிரிவுகளும் சாதிப் பிரிவுகள் ஆகமாட்டா.
முதலில், இந்த நான்கு பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சாதிகள் , பல்வேறு, வகையில், நான்கு, புத்தகங்கள், பிரிவுகளும், கடமைகளையும், வேண்டிய, சாதி, பொறுப்புகளையும், தனிப்பட்ட, சாதிகள், தம்முடைய, அதனுடைய, ஒவ்வொரு, சாதிப், என்பது, பிரிவாகப், வரக்கூடிய, அங்கங்கள், செவ்வனே, முறையானது, அமைப்பினுடைய, அர்த்தமுள்ள, இந்துமதம், மனித, ஓரளவு, திறனும், நிறைவு, இந்து, சிறந்த, பழங்குடி, பற்றியும், ராதாகிருஷ்ணன், துறை, நாம், பிரிவுகள், புரிந்து, நான், தெளிவான, அவர், டாக்டர், அடிப்படையிலும், அமைப்பானது, அந்த, சமூக, அமைந்து, கூடிய, சமூகத்தினுடைய, எனும், நூலில், சாதிமுறை, ஏற்றுக், அனைத்தும், பழக்க, எய்தும், பல்வேறுபட்ட, பொருளினுடைய, காரணத்தால், முழுப், கடமைகளும்