ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Forgo
v. துற, கைவிடு, விலக்கிவாழ், இல்லாமற் கழி, விட்டுவிலகு.
Fork
n. சுவைமுள், கவைக்கோல், கவடு, கவர்படு பிளவு, பிளவுபடும் இடம், கவர், கிளை, மண்வாரி, மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி, இசைச்சுரம் எழுப்பும் கோல், கவைபடும் அம்புமுனை, முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல், மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம், சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி, கிளையிடை வளைவு, பாதைப்பிளவு, ஆற்றுப்பிரிவு, மின்வீச்சு, (வினை) கவடுபடு, கவர்பட்டுக் கிளைவிடு, மண்வாரி எடுத்துக்கொண்டு செல், கிளைவழித் திரும்பிச் செல், கவட்டுக்கோல் கொண்டு இயக்கு, கவைமுள் கொண்டு குத்து, படுபள்ள நீர்வாங்கி வற்றவை, சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Forked
a. கவர்முள் வடிவுடைய, கவடுபட்ட, கவைத்த, பிளவுபட்ட, வேறுவேறுபட்டுச் செல்கிற, இருகால்களுடைய.
Forlorn
a. கைவிடப்பட்ட, துணையற்ற, நம்பிக்கையிழந்த, கையற்ற, இரங்கத்தக்க தோற்றமுடைய, துயரார்ந்த.
Forlornhope
n. வேளைப்படை, துணிவுத்தாக்குதல் படை, அரைகுறை நம்பிக்கை.
Form
n. உருவம், வடிவம், உருப்படிவம், தோற்றம், இனம் தௌதயவராத ஆள் உருவம், இளந்தௌதயப்படாவிலங்கு உரு, இனம் தௌதயவராத் தோற்றம், தோற்ற வகை, வகைவடிவம், உருவகை, வகுப்பு, பள்ளிப்பபடிவம், நீள் மணையிருக்கை, அமைப்பு, உடலமைப்பு, உறுப்பமைதி, முறை, முறைமை, உருவமைதி, ஒழுங்கு மொழி நடை அமைதி, கலைவடிவமைப்பு, இலக்கியக் கட்டுக்கோப்பமைதி, வக்கணை, சொல்வகுப்புக் கட்டளை, வினைமுறை, சடங்கு, மாதிரிச்சட்டம், முன்மாதிரி, அச்சுப் பதிப்புச் சட்டம், மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி, தகுதி நிலை, உடல் நன்னிலை, சொல்லின் புறவுரு, ஒலிவடிவம், எழுத்துமுறை வடிவம், வேற்றுமை வடிவம், திரிவுவகை வடிவம், அகப்படிவம், பொருள் பற்றிய கருத்துப்படிவம், பொருண்மை, பொருளின் உள்ளார்ந்த இயல்பு, முயல்வளையின் கிடக்கைப் படிவு, (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு, வகுத்தமை, அமைப்பாக உருவாக்கு, திட்டமாக அமை, கட்டமை, நிறுவனஞ் செய், கூட்டுக் கழகமாக அமை, சொல்லை ஒலியுருவப்படுத்து, சொல்லாக்கு, சொல் மூலத்திலிருந்து வருவி, கற்பனை செய், வேற்றமை வடிவம் கொள்வி, கருத்துருவாக்கு, ஒப்பந்தம் வகு, பயிற்றுவித்து உருப்படுத்து, பண்புருவாக்கு, அணிவகு, உருவாகு, வடிவம் மேற்கொள், அணிவகுப்பாக அமைவுறு, சொல்லாக உருப்படு, திட்பப் பொருளாகப் படிவுறு, படிக உரு ஆகு, செய்பொருள், ஆக்கு, மூலப்பொருளாய் உதவு, மூலப்பொருளின் கூறாய் அமை, செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Formal
a. புற வடிவம் சார்ந்த, புற அமைதி சார்ந்த, புறப் பண்புகளுக்குரிய, இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய, பொருண்மைச்சார்பு இல்லாத, விதிமுறைக்குரிய, முறையான, ஒழுங்கு முறைக்குரிய, ஒழுங்குமுறை தவறாத, சரியான, பொருத்தமான, வினைமுறைச் சார்பான, சடங்கியல்பு வாய்ந்த, மரபொத்த, நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த, நடைமுறை ஆசாரமான, புற ஆசாரமான, சம்பிரதாயமான, உள்ளுணர்ச்சியற்ற, விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான, நெகிழ்வற்ற, நௌதவிழைவற்ற, மரச்சட்டப்பண்புடைய, நடைவிறைப்பான.
Formalism
n. வினைமுறை வழாப் பண்பு, வினைமுறை மட்டுமீறி முனைப்பான சமயப்பண்பு, விதிமுறைக் கண்டிப்பு, நௌதவழைவின்மை, முறைப்பான நடை, மரச்சட்டம் போன்ற பண்பு.
Formalist
n. வினைமுறையாளர், மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றுபவர், மரபுவழி வலியுறுத்துபவர்.
Formality
n. சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்நு, நயநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு.
Formalize
v. சட்ட உருக்கொடு, விதிமுறைப்படுத்து, ஆசாரமாக்கு, வழுவிலா ஒழுங்கமைதி அளி, நௌதவு இழைவு அற்றதாக்கு.
Format
n. (பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும்.
Formate
-1 n. கரிசக்காடி உப்பு, எறும்பின் கசிவில் அடங்கிய காடியிலிருந்து எடுக்கப்படும் உப்புவகை.
Formate
-2 v. விமானங்கள் வகையில் போர்நிலைத் தொகுதியமைவாக உருவாகு.
Formation
n. உருவாக்குதல், உருவாதல், வகத்தமைப்பு, செயலாக்கம், உற்பத்தி, ஆக்க அமைவு, உரு அமைவு, கட்டமைவு, உறுப்பொழுங்கமைவு, படை அணிவகுப்பு, அணிவகுப்பமைதி, போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு, (மண்.) பாறை அடுக்கமைவு, (தாவ.) செடியினக்குழு.
Formative
n. உருவாக்கி வளர்க்க உதவும் கூறு, ஆக்கச் சொல், (பெ.) உருவாக்கம் சார்ந்த, வளர்ச்சிக்குரிய, உருவரையறை செய்கிற, உருவாக்க உதவுகிற, வளர்ச்சிக்கு உதவுகிற, உருவாகிற, உருப்பெற்ற வளர்கிற, வளரத்தக்க, வளரும் பருவத்துக்குரிய, (இலக்.) சொல்லாக்கத்துக்குக் கூறாய் உதவுகிற, பகுதி சாராத.
Formatting bar
வடிவமைப்பட்டை
Forme
n. அச்சகப்பதிப்புப் படிவம், அச்சிடுவதற்காகத் தளைச்சட்டத்தில் முறையாக வைத்து இறுக்கப்பட்ட அச்சுருப்படிவம்.