பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு

சோழ நாட்டின் வளமும் வனப்பும்
திரை பிறழிய விரும் பெளவத்துக் கரை சூழ்ந்த அகன் கிடக்கை மா மாவின் வயின் வயினெற். |
180 |
றாழ் தாழைத் தண் டண்டலைக் கூடு கெழீஇய குடி வயினாற் செஞ் சோற்ற பலி மாங்திய கருங் காக்கை கவவு முனையின் மனை நொச்சி நிழலாங் கண் |
185 |
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும் |
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளங்களும் காவிரி புரக்கும் கரிகாலன் நாட்டில் மயங்கிக் கிடந்தன. பாலை நிலத்தின் பாங்கும் பாவிக் கிடந்தது. கடற்கரையில் மாமரங்கள். அவற்றை அடுத்துத் தாழை மரங்கள். தாழைமரக் கழிகளை அடுத்து வளவயற் சோலை (தண்டலை) குடில்களில் கூலம் சேமிக்கும் குதிர்க் கூடுகள். கருங்காக்கைகள் அக்குடியில் வாழும் மக்கள் வைத்த நெல்லஞ் சோற்றைத் தின்று சலித்தபோது வீட்டு நொச்சிக்குக் கீழே பொறித்திருக்கும் ஆமைக் குஞ்சுகளைக் கவர்ந்துண்ணப் பார்க்கும். தாய்-ஆமை அதன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.
இளையோர் வண்ட லயரவும் முதியோர் அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும் |
இளைய மகளிர் வண்டல் விளையாடுவர். இளைய காளையர் முதியோரின் மேற்பார்வையில் அவையில் பகைமுரணிய விளையாட்டுகளில் ஈடுபட்டுத் தம் திணவை வெளிப்படுத்துவர்.
முடக் காஞ்சிச் செம் மருதின் மடக் கண்ண மயில் ஆலப் |
190 |
பைம் பாகற் பழந் துணரிய செஞ் சுளைய கனி மாந்தி அறைக் கரும்பி னரி நெல்லின் இனக் களமர் இசை பெருக வற ளடும்பி னிவர் பகன்றைத் |
195 |
தளிர்ப் புன்கின் றாழ் காவின் நனை ஞாழலொடு மரங் குழீஇய அவண் முனையி னகன்று மாறி அவிழ் தளவி னகன் தோன்றி நகு முல்லை யுகுதேறு வீப் |
200 |
பொற் கொன்றை மணிக் காயா நற் புறவி னடை முனையிற் |
முடம் பட்டுக் கிளை தாழ்ந்திருக்கும் காஞ்சிமரம். செம்மாந்து ஓங்கியிருக்கும் மருதமரம் இரண்டிலும் மயில் ஏறி ஆட்டம் காட்டும். பசிக்கும் போது பறந்தோடிப் பாகல் பழத்தைத் தின்னும். அடுத்திருக்கும் பலாச்சுளைகளையும் தின்னும். கரும்பு வெட்டும்போதும் நெல் அறுக்கும்போதும் களமர் (= உழவர்) இசைப் பாடல்கள் பாடுவர். இதனைக் கேட்டுக்கொண்டு மயில் ஆடும். அடும்பு பகன்றை முதலான கொடிகளும் புன்கு ஞாழல் முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் மருத நிலக் காவிலும் அந்த மயில் விளையாடும். இந்த இடங்கள் சலித்துப் போனால் தளவம், தோன்றி, முல்லை முதலான பூப்புதர்களும் கொன்றை, காயா முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் முல்லை நிலப் புறவுத் தோட்டத்திற்குச் சென்று விளையாடும். இங்கும் சலிப்பு நேர்ந்தால் …
சுற வழங்கும் இரும் பெளவத் திற வருந்திய இன நாரை பூம் புன்னைச் சினைச் சேப்பின் |
205 |
ஒங்கு திரை யொலிவெரீ இத் தீம் பெண்ணை மடற் சேப்பவும் கோட் டெங்கின் குலை வாழைக் கொழுங் காந்தண் மலர் நாகத்துத் துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக். |
210 |
யாழ் வண்டின் கொளைக் கேற்பக் கலவம் விரித்த மட மஞ்ஞை நில வெக்கர்ப் பல பெயரத் |
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேனெய் யொடு கிழங்கு மாறியோர் மீனெய் யொடு நறவு மறுகவும் |
215 |
தீங் கரும்போ டவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் |
மயிலானது முல்லை நிலத்துப் புறவு சலித்தால் நெய்தல் நிலத்தில் பூத்திருக்கும் புன்னை மரத்துக்குச் சென்றுவிடும். அருகில் சுறாமீன் வந்துபோகும் கடலலை மோதும். அதில் வாழும் இறால் மீனைத் தின்ற நாரை பூத்திருக்கும் அதே புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும். கடலோரப் புன்னை மரத்தில் இருக்கும்போது கடலலை ஓசையை வெறுத்து அந்த மரத்தை விட்டுவிட்டு நாரை பனைமர மடலுக்குப் பறந்து செல்லும். அதுவும் சலித்தால் தென்னை மடலுக்குச் செல்லும். அதிக உயரம் பறக்க முடியாத மயில் குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தில் அமரும். காந்தள் பூத்திருக்கும் இடத்திற்குச் செல்லும். அருகிலுள்ள மீனவர் பாக்கத்துக் குடிசைப் பகுதியில் இருக்கும் நாகமரத்தில் பாலைநில மக்கள் தம் உடுக்கு போன்ற குடுகுடுப்பைகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பர். அது காற்றில் ஆடும்போது ஓசை உண்டாகும். வண்டுகள் இசை பாடும். இந்த இசைக்கு ஏற்ப மயில் தோகை விரித்து ஆடும். இப்படிப் பல்வேறு நிலமேடுகளில் இடம் பெயர்ந்து மயில் ஆடும். தேன்நெய்க்குக் கிழங்கு, மீன்நெய்க்கு நறவு, மதுவுக்கு மான்கறி என்று பண்டமாற்று வாணிகம் பல்வேறு மணல்மேடுகளில் நடைபெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, மயில், முல்லை, இலக்கியங்கள், முதலான, பொருநராற்றுப்படை, பத்துப்பாட்டு, ஆடும், பூத்திருக்கும், புன்னை, செல்லும், நாரை, மரத்தில், பாக்கத்துக், குலை, யொடு, மறுகவும், கடலலை, பல்வேறு, சலித்தால், விளையாடும், நறவு, கிழங்கு, மண்டிக், வாழும், மக்கள், நெய்தல், சங்க, றாழ், செஞ், குஞ்சுகளைக், இளைய, திரை, கிடக்கும், மரங்களும், தின்னும், களமர், காயா, அந்த