பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு

கேளவ னிலையே கெடுகநின் னவல |
திரையனது ஆணை
மத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக் |
40 |
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல முருமும் உரறா தரவுந் தப்பா காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங் கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச் சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங் |
45 |
அவனது நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள். உன் உள்ளம் (ஊக்கம்) சிறக்கட்டும். அவல நிலை அழிந்து ஒழியட்டும். அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலரும்படி தாக்கி அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்யும் திருட்டு-உழவு இல்லை. காரணம் அவனது காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணைவருவர். இடி தாக்காது. பாம்புப் பயம் இல்லை. காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம். எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர்த் தொடரலாம்.
உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து முழவி னன்ன முழுமர வுருளி யெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார் மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன வாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம் |
50 |
வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக் கோழி சேக்குங் கூடுடைப் புதவின் முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்குந் துளையரைச் சீறுர றூங்கத் தூக்கி நாடக மகளி ராடுகளத் தெடுத்த |
55 |
விசிவீங் கின்னியங் கடுப்பல் கயிறுபிணித்துக் காடி வைத்த கலனுடை மூக்கின் மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்பக் கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண் |
60 |
முடலை யாக்கை முழுவலி மாக்கள் சிறுதுளைக் கொடுநுக நெறிபட நிரைத்த பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச் சில்பத வுணவின் கொள்ளை சாற்றிப் பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி |
65 |
உமணர்களின் உப்பு வண்டியை வழித்துணையாகக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து செல்லலாம். வண்டியின் ஆரைக்கால்கள் (ஆரம்) வரால்மீனின் வற்றல் போல் இருக்கும். ஆரைக்கால் பொருந்தியிருக்கும் குடம் முழவு (= மத்தளம்) போல் இருக்கும். மாட்டு வண்டிக்கு மேல் அமைக்கப்படும் வண்டிக் கூட்டை அக்காலத்தில் ஆரை என்றனர். (ஆரை = அரைவட்டம்) வண்டியின் பார்மரம் கோட்டைக்கதவை மூடும் குறுக்குத் தாழ்ப்பாள் [எழூஉ மரம்] போல் இருந்தது. கூடு குன்றின்மேல் படிந்திருக்கும் மழைமேகம் போலக் காணப்பட்டது. அந்த வண்டி மண்ணை அறுத்துக்கொண்டு சென்றது. வண்டிக்கூட்டின் புதவு (=உட்காரும் நிழலிடம்) யானைக்கு அதன் காவலர் வேய்ந்திருந்த கூரைபோல் இருந்தது. வண்டிக் கூட்டின்மேல் கோழிக்குடும்பம் அமர்ந்திருந்தது (சேவல் அதிகாலையில் கூவி எழுப்புவதற்காகப் பயன்பட்டது போலும்.) வண்டியின் பின்புறம் சிறிய மர உரல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. (வண்டி பின்புறம் கவியாமல் இருக்க இது உதவும்.) அந்த உரல் பெண்யானையின் முழங்கால் போன்று உருவமும் உயரமும் கொண்டதாக இருந்தது. பல வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக (=ஒழுகையாக)ப் பிணிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வண்டியையும் இரண்டிரண்டு எருதுகள் இழுத்துச் சென்றன. எல்லா வண்டிகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்த வண்டி ஒழுகையைப் பல யானைகள் இழுத்துச் சென்றன. உமணப் பெண்கள் வண்டியின்மேல் உட்கார்ந்துகொண்டு காளைகளை முடுக்கி வண்டியை ஓட்டினர். அவர்கள் தம் குழந்தைகளைக் காடித்துணித் தூக்குக் கயிற்று ஏணையில் தாங்கிக் கொண்டிருந்தனர். வண்டியின் நுக மையம் கயிற்றால் கட்டப்பட்டுப் பல ஆண்யானை ஒழுகையுடன் பிணிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் பக்கத்தில் நடந்துகொண்டும் உமணர்கள் யானைகளை ஓட்டினர். உமணர்கள் வேப்பந் தழைகளைக் கோத்துக் கட்டிய மாலைகளைத் தோள்களில் அணிந்திருந்தனர். அவர்களது தோள்கள் பருமனும் அழகும் கொண்ட விட்டம் (=எறுழ்) போன்றவை. உணவைப் பதமாக்குவதால் உப்பு சில்பத உணவு என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட உமணர் ஒழுக்கையொடு நீங்களும் செல்லலாம்.
வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி
யெல்லிடைக் கழியுநர்க் கேம மாக மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉ மரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றா ளடிபுதை யரண மெய்திப் படம்புக்குப் பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின். |
70 |
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள் வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி |
75 |
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர் தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத் தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்க |
80 |
முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி |
மீளி, சாத்து, உல்குவரி வாங்குவோர் முதலானோர் உங்களுக்கு உதவுவர். மீளி - மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவி செய்யும் காவல்காரன் (= போலீஸ்காரன் ). கடப்பம்பூவைச் சூடிய முருகனைப் போல உதவுபவன். அவன் காலில் செருப்பு (அடிபுதை அரணம்) ஆணிந்திருப்பான். கால்சட்டை அணிந்திருப்பான். அவனது மார்பிலே அம்புகள் துளைத்து ஆறிப்போன புண்கள் இருக்கும். அதில் பெருக்கல் குறிபோல வரிந்து கட்டிய கச்சு. அவனுக்கு அகன்ற கணையமரம் போன்ற தோள். அதன் ஒருபக்கம் கருமைநிற வில். மற்றொரு பக்கம் பளபளக்கும் வெண்மை ஒளியுடன் கூடிய வாள். (திருடர்களைப் பயமுறுத்தும் கருவி). வில்லும் வாளும் அவனது மார்புப்பாறை மேல் கறுப்பும் வெள்ளையுமாக ஊர்ந்து செல்லும் இரண்டு பாம்புகள் போலக் காணப்படும். முதுகுப்பக்கம் அம்பு வைத்திருக்கும் சுரிகை. பகைவரைக் கையால் குத்தித் தாக்கும் உடம்பு இடித் தடக்கை. இப்படிப்பட்ட மீளி இரவுக் காலத்தில் புதிதாகச் செல்லும் வழிப் போக்கர்களுக்கு (வம்பலர்களுக்கு)ப் பாதுகாவலாக வந்து உதவி செய்வான். சாத்து - நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம் சாத்து எனப்படும். சாத்து வாணிகர் தம் பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்வர். வளைந்து தாழ்ந்த பலாக்கிளையின் இரண்டு பக்கங்களிலும் பலாப்பழங்கள் பழுத்திருப்பது போல் கழுதையின் மேல் பண்டப் பொதிகள் இருக்கும். பண்டப்பொதி இரு பக்கமும் இருப்பதால் அது புணர்பொதி எனப்பட்டது. பொதியைச் சுமந்து சுமந்து கழுதையின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. தாங்கிப் பழக்கப்பட்டதால் அதன் முதுகு நோன்புறம் ஆயிற்று. கவலை - பிரிந்து செல்லும் வழி கவலை எனப்படும். (அந்தப் பெண்ணா, இந்தப் பெண்ணா? திருமணம் நடக்குமா, நடக்காதா? என்பது போன்றெல்லாம் மனம் இரண்டு வழிகளில் பிரிந்து ஊசலாடுவதும் கவலைதான்.) உல்கு - வழிகள் கூடும் இடங்களில் வணிகரிடம் சுங்கவரி வாங்கப்பட்டது. வில் - அகன்ற காட்டுப்பாதை (இயவு) வழியின் குறுக்கே வில்மரத்தால் தடுத்து உல்கு வாங்கினர். இவர்களும் புதிய வழிப் போக்கர்களுக்கு உதவுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, செல்லும், மீளி, அவனது, சாத்து, போல், இலக்கியங்கள், வண்டியின், இருக்கும், கவலை, பொரும்பாணாற்றுப்படை, வண்டி, மேல், இரண்டு, பத்துப்பாட்டு, உப்பு, இல்லை, உல்கு, பிரிந்து, பெண்ணா, தடக்கை, கழுதைச், சுரிகை, கருவி, உதவுவர், உதவி, வம்பலர், வழிப், போக்கர்களுக்கு, வில், அகன்ற, முதுகு, சுமந்து, கழுதையின், எனப்படும், உரல், வாணிகர், தன்ன, காவலர், சில்பத, இடங்களில், தங்கலாம், சங்க, செய்யும், காட்டு, எங்கும், வண்டியை, செல்லலாம், சென்றன, ஓட்டினர், உமணர்கள், கட்டிய, இழுத்துச், பின்புறம், வண்டிக், போலக், அந்த, இப்படிப்பட்ட