பட்டினப்பாலை - பத்துப்பாட்டு

பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற | 270 |
திருமாவளவனது ஆற்றல்
மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் |
பகைவரின் அச்சம் - இப்படித் திருமாவளவன் பகைவர் நாட்டைப் பாழாக்கியும் நிறைவு கொள்ளாமல் மேலும் போருக்கெழத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ‘இவன் மலையை வேரோடு தோண்டி எறிந்து விடுவான். கடலைத் தூர்த்து விடுவான். வானத்தை மண்ணில் விழச் செய்து விடுவான். காற்றின் திசையை மாற்றி விடுவான்’ – என்றெல்லாம் எண்ணிக்கொண்டு பகையரசர்கள் கலங்கினர்.
தன்முன்னிய துறைபோகலிற் பல்லொளியர் பணிபொடுங்கத் தொல்லரு வாளர் தொழில் கேட்ப |
275 |
வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாத்தனை மறமொய்ம்பிற் செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப |
280 |
புன்பொதுவர் வழிபொன்ற இருங்கோவேள் மருங்குசாயக் |
பகைவர் தோல்வி - ஆற்றில் விரும்பிய துறையில் குளிப்பது போலத் திருமாவளவன் தான் விரும்பிய நாட்டின்மீது போர் தொடுத்தான். அதனால் அவனிடம் பகை கொள்ளாத அரசர்களும் அவன்பால் சாய்ந்தனர். ஒளியர் - ஒளியர்குடி அரசர் பலர் பணிந்து ஒடுங்கினர். ஒளியர் பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர். ‘மலங்கே’ என்று தாலமி குறிப்பிடும் பாசூர் நாகர் ஒளியர் எனப்பட்டனர் என்று கனகசபை பிள்ளை ‘the Tamils 18 hundred years ago” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அருவாளர் - அருவாளர் குடி அரசர்கள் திருமாவளவன் சொன்னதெல்லாம் கேட்டு நடந்தனர். மாவிலங்கை நகரைத் தலைநகராகக் கொண்டும் எயிற்பட்டினத்தைத் துறைமுகமாகக் கொண்டும் குடியினர் இவர்கள். கனகசபை பிள்ளை “The Tamils 18 hundred years ago” என்னும் நூலில் அருவாளர் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார். வடவர் வாடினர் - குடவர் சோர்ந்து குறுகியிருந்தனர். குடவர் என்போர் குடநாட்டுச் சேரர். தென்னவன் திறமை செல்லுபடி யாகவில்லை. தென்னவன் என்பவன் பாண்டியன். இருங்கோவேள் பாண்டியர் சார்பு நிலையை விட்டுத் திருமாவளவனின் சார்பை உண்டாக்கிக் கொண்டான். இவன் பாரி மகளிரை மணந்து கொள்ள மறுத்தவன். - புறம் 201 202. மன்னர்களின் கோட்டைகளை இடிக்கும் வலிமை கொண்ட பெரும்படை இவனிடம் இருந்தது. அதன் துணையுடன் திருமாவளவன் தன் சிவந்த கண்ணின் சினப்-பார்வையை வீசினான். பொதுவர் - அதனைக் கண்ட பொதுவர், கால்வழியே இல்லாமல் அழிந்துவிட்டனர். பொதுவர் என்போர் பொதியில் என்றும், பொதுமீக்கூற்றம் என்றும் (பொதியில், பொதுமீக் கூற்றம் – ஆய் நாடு – புறம் 135) போற்றப்படும் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பொதியமலைப் பகுதியில் ஆண்டுகொண்டிருந்த ஆய்குடி மக்கள். ஆ < ஆய் < ஆயர் = பொதுவர் (காண்க முல்லைக் கலி)
சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிக் பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் |
285 |
கோயிலொடு குடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇ பொருவேமெனப் பெயர்கொடுத்து |
வளவன் தன் நாட்டைத் திருத்தியது - காடுகளை அழித்து விளைநிலங்களாக மாற்றினான். மழைநீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தைப் பெருக்கினான். உறையூரில் புதிய கோட்டையைக் கட்டினான். அதில் அலுவலரைக் குடியேற்றினான். வாயில், பதுங்கும் புழையறை, மதில் மேலிருந்து அம்பு எய்யும் ஞாயில், அதன் அருகில் படைக்கலப் புதையல் வைக்கும் புதையிடம் போன்ற அமைப்புகளைக் கோட்டையில் நிறுவினான். ‘போரிடுவேன்’ என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்டான்.
ஒருவேனெப் புறக்கொடாத | 290 |
திருநிலைஇய பெருமன் னெயில் மின்னொளியெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் பொற்றொடிப் புதல்வர் ஒடி யாடவும் |
295 |
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும் செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண் |
திருமாவளவன் தான் வென்ற பகைவரின் முடிப் பொன்னால் கழல் செய்து தன் பிள்ளைகளுக்கு அணிவித்து, அவர்கள் ஓடியாடுவதைக் கண்டுகளித்தான் - வளவன் போருக்கு எழுந்தபோது வேறு எந்த மன்னரையும் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருவனாகவே போரிட்டு வெற்றி கண்டான். செல்வ வளம் மிக்க இவனது கோட்டை புகழ் மின்னலை வீசியது. அதனால் பிற மன்னர்களின் புகழ் மங்கிப் போயிற்று. முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர். அவனது புதல்வர்கள் அந்தக் கழலொலி கேட்க ஓடியாடி விளையாடினார்கள். ‘முற்றிழை’ என்பது தாலி. திருமாவளவன் தன் முற்றிழை மனைவியரின் மார்பில் மகிழ்ந்து திளைத்தான். அப்போது மனைவியரின் மார்பிலிருந்த செஞ்சாந்து சிதைந்து இவன் மார்புச் சந்தனத்தைச் சிதைத்தது.
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய |
தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்
வேலினும் வெய்ய கானமவன் | 300 |
கோலினுந் தண்ணிய தடமென் தோள. |
திருமாவளவனின் வேலும் கோலும் - திருமாவளவன் சிங்கம்போல் பகைவர்களைத் தாக்கி வெல்லும் திறம் கொண்டவன். திருமாவளவன் பகைவர்களைச் சாய்க்க ஓங்கிய வேல் போல் பொருளுக்காக நீ பிரிந்து செல்ல விரும்பிய கானம் சுட்டெரிக்கும் வெம்மை உடையது. திருமாவளவன் தன் குடிமக்களுக்கு வழங்கும் குளுமைத்தண்மை போல் என்னவளுடையவளின் விரிந்த தோள் குளுகுளுக்கும் தண்மை உடையது. (கோ <= கோல் <= கோன் <= கோமான் = தலைவன்) முடிவ - ு தண்ணிய தோளைப் பிரிந்து ‘வயங்கிழை ஒழிய வாரேன் நெஞ்சே’ (அடி 200) என்கிறான் கிழவன் (கிழவன் = கிழத்தி ஒருத்திக்கு உரியவன்).
பட்டினப்பாலை முற்றும்.
தனிப் பாடல்
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய் அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப்பு உற்று |
இது பிற்காலத்தில் பாடிச் சேர்க்கப்பட்ட வெண்பா. காவிரியின் தூய புனல்நீர் பாயும் வயல்களில் நெல் அறுவடைக்குப் பின் வளரும் தாளடி நெற்பயிர் தேன் கூடுகட்டும் அளவுக்குச் செழிப்பாக வளரும். கரிகாலன் அந்நாட்டின் அரசன். அந்தக் கரிகாலன் காலில் நெருப்புப் பட்டது. என்றாலும் அவனது ஆட்சிச் சக்கரக் கால் நிலப்பரப்பை யெல்லாம் அளந்தது. ஞாயிறு, திங்கள், தீ என்பன 3 சக்கரங்கள். இவை முறையே சோழனையும், பாண்டியனையும், சேரனையும் குறிப்பன. கரிகாலன் மூவேந்தரையும் வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினான் எனபது இப்பாடலில் நயமாகக் கூறப்பட்டுள்ளது. ஞாயிறு – வெம்மை தரும் தீ. திங்கள் – தண்மை தரும் தீ. இவை விண்ணில் உள்ள தீ தீ – செம்மை தரும் தீ. மண்ணில் உள்ள தீ. இந்த 3 சக்கரங்களையும் அளந்து பார்க்க உதவும் அலகாக (அளவுகோலாக) உதவுவது ‘கால்’ என்னும் காற்று. இந்த அறிவியல் உண்மையைத் தெளிவுபடுத்தும் தொடர்தான் ‘முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்’ என்பது. திருமால் தன் காலால் 3 தப்படி வைத்து 3 உலகங்களையும் அளந்தான் என்பது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும் தத்துவக் கதை. இவ்வுண்மையை உணர்ந்த அறிவன் ஒருவன் மாவலி மன்னனிடம் மண் கொண்ட கதையை உருவாக்கி ‘மறை’ பொருளாக உரைத்துள்ளான்.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, திருமாவளவன், இலக்கியங்கள், பொதுவர், ஒளியர், தென்னவன், அருவாளர், வளவன், குடவர், பட்டினப்பாலை, விரும்பிய, குவனே, விடுவான், பத்துப்பாட்டு, உடையது, கொண்டான், மன்னர்களின், புறம், பொதியில், இவன், போல், செஞ்சாந்து, திருமாவளவனின், அணிந்திருந்த, முற்றிழை, மனைவியரின், புகழ், புதல்வர், என்றும், ago”, வடவர், தான், அதனால், செய்து, பகைவர், சங்க, பகைவரின், கனகசபை, பிள்ளை, நூலில், கொண்டும், என்னும், years, tamils, hundred, என்போர்