சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு; வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால், நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையை நாடாதே, தீதுஉரையும் நஞ்சு. |
11 |
ஓருயிரை அருளின்றிக் கோறலும் தனக்கு நஞ்சு போலும், பிறிதொன்றினுடைய ஊனைத் தின்றலும் தனக்குக் கொடிய நஞ்சு போலும், தனக்கு எதிராகாதானை அடர்த்து வெல்லுதலும் தனக்கு நஞ்சு போலும், ஒருவனை ஒரு கருமத்துக்கு ஆமென்றாராய்ந்து தேறினால் அக்கருமத்தில் விடாதே நீட்டித்துக்கொண்டு செலுத்தலும் தனக்கு நஞ்சு போலும், தன்னிளைய சுற்றத்தாரை ஆராயாதே தீதுரைத்தலும் தனக்கு நஞ்சு போலும்.
கருத்துரை: கொலை செயத்தலும், புலாலுண்டலும், நிகரில்லாதவனை எதிர்த்து வெல்லுதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனை வினை மேற் செலுத்தாது காலம் நீட்டித்தலும், இளங்கிளைஞரையாராயாது தீங்கு செல்லுதலும் அகிய ஐந்தும், ஒருவனை நஞ்சு போலத் துன்பஞ் செய்யும் என்பதாம்.
இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா; தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;- கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே, கொண்ட விரதம் குறைவு. |
12 |
நட்டார் மாட்டுக்கண்ட இடரின்னா , அவர்மாட்டு , ஈயாமையின்னா, வஞ்சனையுடையர் மாட்டு நடக்கு நட்பின் மனந்தூயாரை நீங்குதலின்னா , கண்டல் விளங்குங் குழாய் !தாங்கொண்ட விரதங்கள் நிரம்ப முடியதே குறையாக ஒழுகுதல்இன்னா.
கருத்துரை: யாரிடத்திலும் துண்பஞ்செயாதலும் ,அவர்கட் கிடருற்றகாலத்து யாமையும். பகைவரிடம் உறவுகொள்ளுதலும் , தூயாரை நீங்குதலும் எடுத்த விரதத்தை முடிக்காமையும் ஆகிய இவ்வைந்தும் தீயபயன்களைத்தரும் என்பதாம்.
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத் தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே, வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு; கோல் வழி வாழ்தல் குணம். |
13 |
கொழுகன் வழியொழுதல் பெண் குணம், தந்தைக்கிடைவிடாதே நிரந்தரமா யொழுகஸ் மகன்குணம், அவனைப்போல் வழியொழுகுதல் கிளையின் குணம், பகைவரோடு செறியாதே வேல்வழியினிடை விடாது வாழ்தல், அரசன் வெம்முனையிற் போயிருந்தார் குணம், அவ்வரசன் கோல்வழியே வாழ்தல் நாட்டின் குணம்.
கருத்துரை: பெண் கனவன் சொற்படி யொழுகுதலும், மகன் தந்தை சொல்வழி நடத்தலும், கிளை அவன்போலவே வழியொழுகுதலும், வெம்முனையின்கட் போயிருந்தார் பகைவரோடு செராதே அவரை செல்லும் வழியால் இடைவிடாமல் வாழ்தலும், நாடு அரசனது கோல்வழியே வாழ்தலும் அவரவர்கட்குரிய குணங்களாம்.
பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த, பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார் நகை கெட வாழ்வதும், நன்று. |
14 |
தனக்குப்பிற னொருவன் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமையாவது, பிற ரிழைத்த தீங்குகளை மறவாதிருத்தல் சிறுமையாவது, தான் செய்த பிழைகளைப் பின்பு கெட வாழ்தலும், பலபொருள்களையு முதவியோரும் நல்லோருமிகழ்ந்து நகுநடையினைக் கெட வாழ்தலும் நன்று.
கருத்துரை: பிறர் தவற்றைப் பொறுத்தல் பெருமை, பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை, பிறர் பகை கெட வாழ்தலும் செல்வரும் நல்லோரும் ஏளனஞ்செய்து நகைக்காது வாழ்தலும் நன்மை யுடையனவாம்.
கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால், கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்த நாய் வாயுள் நல்ல தசை. |
15 |
நன்மைக் குணமில்லாதார் முன்பு கோபம் நன்று, சான்றாண்மை தீது, மிக்கவலி செய்தல் நன்று; கள்ளினை முகக்குங் கோய்போலும் வாயையுடைய கீழ்மக்கட் கீயும் உணவும் குரைத்தெழுந்த நாய் வாய்க் கீயும் தசையின் றிறப்பாட்டினன்று.
கருத்துரை: நற்குணமில்லாதவர் கெதிரில் கோபமே நன்று, சான்றாண்மை தீது, மிக்க வலி செய்தல் நன்று; கீழ்மக்கட்கு ஈயுமுணவு குரைத்துவரும் நாய்வாயிற் கொடுத்த தசைக்கு நிகராகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, நஞ்சு, நன்று, வாழ்தலும், தனக்கு, போலும், குணம், கருத்துரை, இலக்கியங்கள், இன்னா, சிறுபஞ்சமூலம், பெண், வாழ்தல், பதினெண், பொறுத்தல், செய்த, கீழ்க்கணக்கு, சான்றாண்மை, ஒருவனை, பிறர், தீது, பிழைத்த, பெருமை, சிறுமை, செய்தல், வாழ்வதும், கீயும், நாய், மகன், வெல்லுதலும், தீங்கு, தேறினால், ஊனைத், சங்க, கோறலும், என்பதாம், கண்டல், பகைவரோடு, போயிருந்தார், நாடு, கிளை, ஒழுகல், கோல்வழியே