புறநானூறு - 276. குடப்பால் சில்லுறை!
பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்
திணை:தும்பை
துறை: தானைநிலை
நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல், இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன், மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த குடப்பால் சில்லுறை போலப், |
5 |
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே. |
சிறந்த மூத்த குடிமகள் ஒருத்தியின் அன்புச் செல்வன் எதிரியின் மிகப் பெரிய படையையே தோற்கச் செய்யும் போர்-மறவனாக விளங்கினான். நிறைந்திருக்கும் பெரும்பானைப் பாலில் ஆயர்-மகள் தன் கை நகத்தால் தொட்டுத் தெரித்த மோர் உறை போல எதிர்த்த பெரும்படையைக் கலங்க வைத்தான். செம்முது பெண்டு நறுமணப் பொருள்களைப் பூசாத நரைத்த கூந்தலை உடையவள். இலவங்காய் போன்று சுருங்கி வெறிச்சோடிக் கிடக்கும் முலையை உடையவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 276. குடப்பால் சில்லுறை!, இலக்கியங்கள், சில்லுறை, குடப்பால், புறநானூறு, செம்முது, உடையவள், எட்டுத்தொகை, சங்க