புறநானூறு - 275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: எருமை மறம்
கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன் வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, |
5 |
ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாது தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக், கன்றுஅமர் கறவை மான ; முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே. |
கோடு என்னும் மரக்கிளையில் பூக்கும் வாகைப்பூ. வாகை என்பது வெற்றியின் சின்னம் கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று – என்பது திருக்குறள். வளைந்த பூ மாலை எனவும் பொருள் காண்பர். கொடுந்திரை ஆடை. அலைபோல் மடிப்பினைக் கொண்ட பஞ்சகச்ச ஆடை. குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் - என்பது திருக்குறள் (மடித்தற்று = பஞ்சகச்சமாக உடுத்திக்கொண்டு) தன் தோழற்கு வருமே உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு – என்று இதனைத் திருக்குறள் விளக்குகி
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 275. தன் தோழற்கு வருமே!, வருமே, தோழற்கு, இலக்கியங்கள், என்பது, புறநானூறு, திருக்குறள், என்னும், கொடுந்திரை, சங்க, எட்டுத்தொகை, ஓம்புமின்