புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.
நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போலக், களிறு சென்று களன் அகற்றவும், களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எகு ஏந்தி, |
5 |
அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி, முடித் தலை அடுப் பாகப், புனல் குருதி உலைக் கொளீஇத், தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
10 |
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்னர் ஏவல் செய்ய, மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! |
15 |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று, ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே. |
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!, இலக்கியங்கள், பகைவர், நின், நோற்றார், புறநானூறு, வாகை, களன், எட்டுத்தொகை, சங்க, மாங்குடி