புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத் |
5 |
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி, முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல, அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத் தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து. |
10 |
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள, எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர் எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்; இன்ன விறலும் உளகொல், நமக்கு?என, மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் |
15 |
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை, எழுவர் நல்வலங் கடந்தோய்! நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
XXXX
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!, இலக்கியங்கள், எழுவரை, புறநானூறு, வென்ற, ஒருவன், இறுத்த, சங்க, எட்டுத்தொகை