புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!
பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை; வாகை.
துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா வெல்லை, குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக், கொடிது கடிந்து, கோல் திருத்திப், |
5 |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
10 |
நிலவு மணல் வியன் கானல், |
15 |
பீடு உடைய எறுழ் முன்பின் |
20 |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப், பிறிது சென்று, மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக் கூறலின், உண் டாகிய உயர் மண்ணும், சென்று பட்ட விழுக் கலனும், |
25 |
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும், ஏந்து கொடி இறைப் புரிசை, வீங்கு சிறை, வியல் அருப்பம், இழந்து வைகுதும்.இனிநாம்; இவன் உடன்று நோக்கினன், பெரிது எனவும், |
30 |
வேற்று அரசு பணி தொடங்குநின் ஆற்ற லொடு புகழ் ஏத்திக், காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய மழையென மருளும் பல் தோல், மலையெனத் தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, |
35 |
உடலுநர் உட்க வீங்கிக், கடலென வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப, இடியென முழங்கு முரசின், வரையா ஈகைக் குடவர் கோவே! |
40 |
XXXX
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!, இலக்கியங்கள், பட்ட, வேந்தனும், யானையும், புறநானூறு, பலர், சென்று, முன்பின், சங்க, குழி, எட்டுத்தொகை