பதிற்றுப்பத்து - 82. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வினை நவில் யானை
பகை பெருமையின், தெய்வம் செப்ப, ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, |
5 |
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; மறவர் மறல; மாப் படை உறுப்ப; தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் பல் நாள் ஆக- |
10 |
பாடிக் காண்கு வந்திசின், பெரும!- பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும், மறனும், புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, |
15 |
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 82. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, நாள், கொடி, கொளக், கொலக், யானை, வண்ணமும், எட்டுத்தொகை, சங்க, வினை, நவில்