பதிற்றுப்பத்து - 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : புண்ணுடை எறுழ்த் தோள்
வால் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு, அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க; சாந்து புலர்ந்த வியல் மார்பின், |
5 |
தொடி சுடர் வரும் வலி முன் கை, புண்ணுடை எறுழ்த் தோள், புடையல்அம் கழல் கால், பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை, ஒளி வாள், ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று, உரைஇ, 'இடுக திறையே, புரவு எதிர்ந்தோற்கு' என, |
10 |
அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ, அனையை ஆகன்மாறே, பகைவர் கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவிக் கடும் பரி நெடுந் தேர் மீமிசை நுடங்கு கொடி, புல வரைத் தோன்றல் யாவது-சினப் போர், |
15 |
நிலவரை நிறீஇய நல் இசை, தொலையாக் கற்ப!-நின் தெம்முனையானே? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல் , இலக்கியங்கள், கூறுதல், மன்னவன், சிறப்புக், பதிற்றுப்பத்து, வென்றிச், சிறப்பொடு, கொடைச், படுத்து, தோள், கால், எறுழ்த், வண்ணம், சங்க, எட்டுத்தொகை, புண்ணுடை