பதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பிறழ நோக்கு இயவர்
வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் அவ் வெளி அருவி உவ் வரையதுவே- சில் வளை விறலி! செல்குவை ஆயின், வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து, மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி, |
5 |
கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல, பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின், தகடூர் நூறி, பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் |
10 |
ஓடுறு கடு முரண் துமியச் சென்று, வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின், ஆ பரந்தன்ன யானையோன் குன்றே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 78. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, பதிற்றுப்பத்து, வென்றிச், நோக்கு, இயவர், பரந்தன்ன, பிறழ, விறலி, எட்டுத்தொகை, சங்க, வண்ணம்