பதிற்றுப்பத்து - 76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா சிதறு இருக்கை
களிறுடைப் பெருஞ் சமம் ததைய, எஃகு உயர்த்து, ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று, முரசு கடிப்பு அடைய அருந் துறை போகி, பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல, புண் ஒரீஇ, |
5 |
பெருங் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்-கால்கொண்டு, கருவி வானம் தண் தளி சொரிந்தென, |
10 |
பல் விதை உழவின் சில் ஏராளர் பனித் துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கம் கடுப்ப, சூடி, இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே! |
15 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் , சிறப்பும், இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, கொடைச், இருக்கை, சிதறு, பெருங், சங்க, எட்டுத்தொகை, துறை, வண்ணம்