பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு
துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண், கோடியர் முழவின் முன்னர், ஆடல் வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!- வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து, இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், |
5 |
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 56. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, மெய்ம்மறந்த, வாழ்ச்சி, வேந்து, வாள், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்