பதிற்றுப்பத்து - 16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துயிலின் பாயல்
கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி, நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல், துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, |
5 |
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின், கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை, நீடினை ஆகலின், காண்கு வந்திசினே: ஆறிய கற்பின், அடங்கிய சாயல், |
10 |
ஊடினும் இனிய கூறும் இன் நகை, அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின், சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்; பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்று திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் |
15 |
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர, எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து, புரையோர் உண்கண் துயில் இன் பாயல் பாலும், கொளாலும் வல்லோய்! நின் சாயல் மார்பு நனி அலைத்தன்றே? |
20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் , சிறப்பும், இலக்கியங்கள், அரசனது, பதிற்றுப்பத்து, பாயல், இன்பச், குலமகளோடு, வென்றிச், நிகழ்ந்த, சாயல், திரு, உறழ்ந்து, எட்டுத்தொகை, சங்க, வண்ணம்