நற்றிணை - 324. குறிஞ்சி

அந்தோ! தானே அளியள் தாயே; நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- கோடு முற்று யானை காடுடன் நிறைதர, நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
5 |
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! |
பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே!
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம். - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 324. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நெய், இவளுடைய, யானை, நொந்து, எட்டுத்தொகை, சங்க, பொன்