நற்றிணை - 305. பாலை

வரி அணி பந்தும், வாடிய வயலையும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, தமியே கண்ட தண்டலையும் தெறுவர, நோய் ஆகின்றே- மகளை!- நின் தோழி, |
5 |
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, இலங்கு இலை வெள் வேல் விடலையை விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. |
10 |
மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தௌ¤ந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது;
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம். - கயமனார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 305. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, நின், தோழி, கண்ட, பொருந்திய, விளையாடிய, நோக்கி, மயில், எட்டுத்தொகை, சங்க, பந்தும், வாடிய, நொச்சியும்