குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)
வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் |
5 |
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. | |
- பெரும்பதுமனார். |
ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுக்கள் ஒலித்தற்கு இடமாகிய மூங்கில்செறிந்த பாலை நிலப் பரப்பில் கடந்து செல்ல நினைந்துவருபவர்களுள் வில்லை உடையவனாகியஇவ்வாடவனது காலில் உள்ளன வீரக் கழல்கள்; தோள் வளையை அணிந்த இம்மகளினுடையமெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; இந்நல்லோர் யாவரோ? இவர் அளிக்கத் தக்கார்!
முடிபு: அழுவம் முன்னியோர் யார் கொல்? அளியர்!
கருத்து: மணம் புரிந்து கொள்ளாத இவர் திறம் இரங்கத் தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 7. பாலை - கண்டோர் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, கண்டோர், வாகை, அழுவம், இவர், கலங்கி, மேல், காலில், எட்டுத்தொகை, சங்க, மணம், அளியர்