குறுந்தொகை - 386. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றவேண்டுமென்று வற்புறுத்திய தோழியை நோக்கி, “மாலைக்காலத்தில் காமநோய் மிகுவதனால் துன்புறுகின்றேன்” என்று தலைவி கூறியது)
வெண்மணல் விரிந்த வீததை கானல் தண்ணந் துறைவன் தணவா ஊங்கே வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும் மாலையோ அறிவேன் மன்னே மாலை நிலம்பரந் தன்ன புன்கணொடு |
5 |
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே. | |
- வெள்ளிவீதியார். |
தோழி! வெள்ளிய மணல் பரவிய மலர்கள் செறிந்த சோலையையுடைய தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன் என்னைப் பிரியாதமுன்காலத்தில் யான்! தூய அணிகலன்களை யணிந்த மகளிர் விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; இனி அது கழிந்தது! அம்மாலைக் காலம் பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு தனிமையைஉடையதாதலை அப்பொழுது அறியேன்.
முடிபு: துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.
கருத்து: தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 386. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, அறியேன், நெய்தல், குறுந்தொகை, மகளிர், கூற்று, மாலை, யான், மாலையோ, தலைவன், எட்டுத்தொகை, சங்க, துறைவன், கூட்டும்