குறுந்தொகை - 383. பாலை - தோழி கூற்று
(தலைவனுடன் செல்லத் தலைவி உடம்பட்டமை தெரிந்துஅக்கருத்தைத் தலைவனுக்கு வெளியிட்டபின் அவன் வந்து நிற்ப, அப்பொழுது நாண் அழிதற்கு வருந்திய தலைவியை நோக்கி, “நின்உடம்பாட்டை யறிந்தே அவனை வரச் செய்தேன்; இப்பொழுது மறுப்பின் என்செய்வேன்!” என்று தோழி கூறியது.)
நீயுடம் படுதலின் யான்தர வந்து குறிநின் றனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலும் ஓய்வன அழுங்கத் தீயுறு தளிரின் நடுங்கி |
5 |
யாவதும் இலையான் செயற்குரி யதுவே. | |
- படுமரத்து மோசிகீரனார். |
நீ உடன்போக இயைந்த மையால் நான் கூற தலைவன் குறியிடத்தே வந்து நின்றான; நீயோ! இன்றையாகியபோதுகழிக என்று கூறினாய; கையும் காலும் ஓய்வனவாகி வருந்த நெருப்பில் விழுந்த தளிரைப் போல நடுங்கி நான் செய்யத்தக்கதுஒன்றும் இல்லை.
முடிபு: நாடன் நின்றனன்; சென்றைக்கென்றி; அழுங்க நடுங்கிச் செயற்குரியது இலை.
கருத்து: நீ தலைவனுடன் இப்பொழுதே செல்லுதல் நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 383. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, வந்து, குறுந்தொகை, பாலை, நடுங்கி, நான், காலும், தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, நாடன்