குறுந்தொகை - 375. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “காவலருடைய காவல் மிக்கது”என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி, வரைதல்வேண்டுமென்பதை அவனுக்கு உணர்த்தியது).
அம்ம வாழி தோழி இன்றவர் வாரா ராயினோ நன்றே சாரற் சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத் திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை பானாள் யாமத்துங் கறங்கும் |
5 |
யாமங் காவலர் அவியா மாறே. | |
- ....... |
தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக மலைப்பக்கத்தில் சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில் இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல தொண்டகமாகிய சிறிய பறை பாதியிரவிலும் இராக் காவலாளிகள் தூங்காமையினால் ஒலிக்கும் இன்று! அத்தலைவர் வாராராயின்! நலமாகும்.
முடிபு: காவலர் அவியாமாறு கறங்கும்; இன்று அவர் வாராராயின் நன்று.
கருத்து: தலைவர் இரவில் வருதல் நன்றன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 375. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சிறிய, இன்று, வாராராயின், காவலர், விளைந்த, எட்டுத்தொகை, சங்க, கறங்கும்