குறுந்தொகை - 315. குறிஞ்சி - தலைவி கூற்று
("தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும்ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனதுவிருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்றுதலைவி கூறியது.)
எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் ஞாயி றனையன் தோழி நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. |
|
- மதுரை வேள்ஆதத்தனார். |
தோழி! உதயமாகின்ற சந்திரன் கடலினிடத்தே காணப்பட்டாற் போல ஓடிவருகின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்தமலைநாட்டையுடைய தலைவன் சூரியனைப் போன்றவன்; என் பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள் நெருஞ்சி மலர்களைப் போன்றன.
முடிபு: தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.
கருத்து: தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 315. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தோழி, தலைவி, நெருஞ்சி, எட்டுத்தொகை, சங்க