குறுந்தொகை - 307. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவின்கண், “நீ ஆற்றாயாதல் நன்றன்று” என்றுஇடித்துரைத்த தோழியை நோக்கித் தலைவி கூறியது.)
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாது |
5 |
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந் தழுங்க னெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை அழப்பிரிந் தோரே. |
|
- கடம்பனூர்ச் சாண்டிலியனார். |
தோழி! பிறை! வளையையுடைத்தாற் போன்றதாகி கன்னி மகளிர் பலரும் தொழும்படி செவ்விய இடத்தையுடைய ஆகாயத்தின் கண் விரைவாகத் தோன்றி இன்னும் பிறந்தது; ஆண்யானை வருந்திய நடையையுடையதனது மடப்பத்தையுடைய பிடியினது வருத்தத்தை பொறாமல் உயர்ந்த நிலையையுடைய யாமரம் அழியும்படிகொம்பாற் குத்தி பசையற்ற வெள்ளியபட்டையைக் கைக்கொண்டு வறுங்கையைச்சுவைத்து மேல் நோக்கி தன் பிடியின் வருத்தத்தைப் போக்க இயலாமையைநினைந்து வருந்துதலையுடைய நெஞ்சோடு பிளிறுகின்ற அரிய வழியையுடையநீண்ட இடத்து நாம் அழும்படி நம்மைப்பிரிந்து சென்ற தலைவர் அந்தோ நம்மை மறந்தனரோ?
முடிபு: பிறை இன்னம் பிறந்தன்று; அழப் பிரிந்தோர் மறந்தனர்கொல்?
கருத்து: தலைவர் என்னை மறந்தனர் போலும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 307. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, குத்தி, பிறை, தலைவர், மறந்தனர், தோன்றி, எட்டுத்தொகை, சங்க, இன்னம், பிறந்தன்று