குறுந்தொகை - 225. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் தலைவனை நோக்கி,“இதுகாறும் நின் விருப்பப்படியே ஒழுகி வந்த யாம் செய்த நன்றியைமறவாது, எம் விருப்பத்திற்கு இணங்க விரைவில் வரைந்து கொள்வாயாக”என்று தோழி கூறியது.)
கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட கெட்டிடத் துவந்த உதவி கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க் |
5 |
கலிமயிற் கலாவத் தன்ன இவள் ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. |
|
- கபிலர். |
யானைக்கன்று தனது பாலுள்ள முலைகுடித்து நிற்ப வீட்டின் முன்னிடத்துள்ள தினைப் பயிரை பெண் யானை உண்ணுதற்கு இடமாகிய பெரிய மலைகளை உடைய நாடனே தான் வறுமையுற்ற காலத்துப் பிறரால்பெற்று மகிழ்ந்த உதவியை அரசுகட்டில ாகிய சிறப்பைப் பெற்று மறந்து விட்ட அரசனைப் போல நீ யாம்செய்த நன்றியை மறந்து பொருந்தாயாகி அதனை நினைந்து வரைந்து கொள்வாயாயின் இத்தலைவியினுடைய மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும்மயிலினது பீலியைப் போன்ற தழைத்தமெல்லிய கூந்தல் பகுதிகள் நினக்கேஉரிமை உடையனவாகும்.
முடிபு: நாட, நன்றி மறந்து அமையாயாயின், இவள் கூந்தல் நினக்கே உரியவாம்.
கருத்து: நீ யாம் புரிந்த நன்றியை மறவாது விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 225. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மறந்து, குறிஞ்சி, குறுந்தொகை, கூந்தல், கூற்று, நினக்கே, நன்றியை, உடைய, யாம், எட்டுத்தொகை, சங்க, விரைவில், வரைந்து, இவள்