குறுந்தொகை - 219. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக்கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)
பயப்பென் மேனி யதுவே நயப்பவர் நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே வல்லா கூறியிருக்கு முள்ளிலைத் |
5 |
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. |
|
- வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார். |
தோழி! பசலையானது எனது மேனியின் கண்ணது; காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும் நெடுந்தூரத்தில்.நீங்கியது; எனது அறிவு தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின் முள் அமைந்த இலையை உடைய பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு இது தக்க செவ்வியாகும்.
முடிபு:தோழி, பயப்பு என் மேனியது; நயப்பு ஆரிடையது;செறிவும் இகந்தன்று; அறிவு இருக்கும்; எந்நீரிரோ எனின், சேர்ப்பர்க்குஇடம்.
கருத்து: தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 219. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, எனது, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவர், அறிவு, உடைய, இருக்கும், கூறி, எட்டுத்தொகை, சங்க, யதுவே, தோழி