குறுந்தொகை - 217. குறிஞ்சி - தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)
தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும் இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல் யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத் தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற |
5 |
ஐதே காமம் யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே. |
|
- தங்கால் முடக்கொல்லனார். |
தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின் பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும் அங்ஙனம் இன்மையின் இராக் காலத்து நீ வருதலினால் வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன் துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு எவ்வாறுபரிகாரம் செய்வேம் என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன் வேறு ஒன்றை நினைத்து அந்நினைவினால் வெய்துயிர்த்தான்; காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான் நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும் பழிக்குக் காரணமும்ஆம் என்றேன்.
முடிபு: என யான் கூறிய அனைத்திற்கு நாடன் உயிர்த்தோன்; காமம் ஐது; யான் முதுக்குறைமையும் பழியும் என்றிசின்.
கருத்து: தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 217. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவன், யான், தோழி, கூற்று, குறுந்தொகை, நாடன், உயிர்த்தோன், காமம், கூறிய, குறியும், எட்டுத்தொகை, சங்க, உடன்போக்கை, கூறி