குறுந்தொகை - 200. முல்லை - தலைவி கூற்று
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந் திழிதரும் புனலும் வாரார் தோழி மறந்தோர் மன்ற மறவா நாமே கால மாரி மாலை மாமழை |
5 |
இன்னிசை யுருமின முரலும் முன்வரல் ஏமம் செய்தகன் றோரே. |
|
- அவ்வையார். |
தோழி! கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள் வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்; முன்பு மழைபெய்த குன்றத்தின்கண் மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே பரவிய மலர்களைச் சுமந்து வந்து அருவிப்புனலும் வீழும்; கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர் இன்னும் வாராராயினர்; அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்; நாம் அவரை மறத்தல் செய்யாம்.
முடிபு: தோழி, மழை முரலும்; புனலும் இழிதரும்; அகன்றோர்வாரார்; மறந்தோர் மன்ற; நாம் மறவாம்.
கருத்து: கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 200. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தலைவர், மறந்தோர், மன்ற, முரலும், நாம், அவர், எட்டுத்தொகை, சங்க, நம்மை, மறந்தார், புனலும்