குறுந்தொகை - 190. முல்லை - தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான்துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச் செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் |
5 |
நல்லே றியங்குதோ றியம்பும் பல்லான் தொழுவத் தொருமணிக் குரலே. |
|
- பூதம் புலவனார். |
தோழி! நெறிப்பைஉடைய கரிய கூந்தலோடு பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர் புள்ளிகளையும் பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின் பசிய தலைகள்துணியும்படி வலியையுடைய இடியேறு முழங்குகின்ற பாதியிரவின் கண் பல பசுக்கள் உள்ள தொழுவத்தில் நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற ஒற்றைமணியின் குரலை அறிவாரோ?
முடிபு: தோழி, அகன்றோர் நடுநாள் ஏறு இயங்கு தோறியம்பும்மணிக்குரலை அறிவர்கொல்?
கருத்து: இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 190. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், முல்லை, தோழி, குறுந்தொகை, அறிவர்கொல், நடுநாள், அறிவாரோ, படும், எட்டுத்தொகை, சங்க, துன்பத்தைத்