குறுந்தொகை - 122. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழியோ மாலை ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. |
|
- ஓரம் போகியார். |
பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய புறத்தைப் போன்ற ஆழமாகிய நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன; இப்பொழுது மாலைக்காலம் வந்தது; அது வாழ்வதாக! இங்ஙனம் வந்தது இம்மாலையாகிய தான் ஒன்று மட்டும் அன்று; தன் பின் வரும் யாமத்தையும் உடையது; இனி என் செய்வேன்!
முடிபு: ஆம்பலுங் கூம்பின; இனி மாலை வந்தன்று; ஒரு தான் அன்று; கங்குலும் உடைத்து.
கருத்து: இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 122. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், வந்தது, தான், அன்று, கங்குலும், கூம்பின, எட்டுத்தொகை, சங்க, வந்தன்று, மாலை