குறுந்தொகை - 116. குறிஞ்சி - தலைவன் கூற்று
(ஊழ்வலியால் தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)
யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல் வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல்வார்ந் தன்ன நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே. |
|
- இளங்கீரனார். |
நெஞ்சே! என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது வண்டுகள் தாவுகின்ற கூந்தல் வளப்பம் பொருந்திய சோழரது உறையூரிற் பெரிய நீர்த்துறைக்கண் உள்ள நுண்ணிய கருமணல் நீண்டு படிந்தாற் போன்ற நல்ல நெறிப்பை உடையன; நறுமையும் தண்மையும் உடையன.
முடிபு: யான் நயந்துறைவோள் கூந்தல் நன்னெறிய; நறுந் தண்ணிய.
கருத்து: தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 116. குறிஞ்சி - தலைவன் கூற்று, கூந்தல், இலக்கியங்கள், தலைவன், உடையன, குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, எட்டுத்தொகை, சங்க