கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 96
'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்; பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை; சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை; யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி: ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! | 5 |
குதிரை வழங்கி வருவல்' அறிந்தேன், குதிரைதான்; பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல், மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை, நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ் | 10 |
ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை, மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி, நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை, தார் மணி பூண்ட தமனிய மேகலை, | 15 |
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை, ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள், ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை, | 20 |
வாதுவன்; வாழிய, நீ! சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண் குதிரையோ, வீறியது; கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே | 25 |
கோரமே வாழி! குதிரை; வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண் குதிரையோ, கவ்வியது; சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே | 30 |
வியமே வாழி! குதிரை; மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை; பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட பருமக் குதிரையோ அன்று; பெரும! நின் ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர் | 35 |
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த் திரி; குதிரை ஏறிய செல். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 96, குதிரை, நின், இலக்கியங்கள், குதிரையோ, மருதக், கலித்தொகை, கலித்தொகை, கொண்ட, பெரு, மெய்க்கண், ஊர்ந்த, வாழி, நேர், சுவல், சங்க, எட்டுத்தொகை, அறிந்தேன், யாத்த, எதிர்