கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 9
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல், உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும், நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!- வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை, | 5 |
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும், தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!' 'காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை; ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய | 10 |
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்? நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, | 15 |
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்? தேருங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்? சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! | 20 |
எனவாங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 9, இலக்கியங்கள், மகள், செய்யும், நும், நுமக்கும், அனையளே, ஆங்கு, அவைதாம், அல்லதை, பாலைக், பிறப்பினும், கலித்தொகை, கலித்தொகை, சங்க, எட்டுத்தொகை