கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 136
இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால், உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி, தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப, கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப! முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் | 5 |
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ? முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் | 10 |
கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ? நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால், மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் | 15 |
சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ? ஆங்கு கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய், தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழீஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் | 20 |
ஈண்டுக, இவள் நலம்! ஏறுக, தேரே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 136, இலக்கியங்கள், கலித்தொகை, அளித்தக்கால், போல், உழப்பவோ, நெய்தற், கலித்தொகை, மனம், துயர், எக்கர், எட்டுத்தொகை, சங்க, நந்தியாள்