கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 113
நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள், அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ, உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய் யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி; | 5 |
தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப் புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான் ஒக்கும்மன்; புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு நல் இனத்து ஆயர், எமர் | 10 |
'எல்லா! நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்' 'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு' விடேன், உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு, | 15 |
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்! நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு என் நெஞ்சம் ஏவல் செயின்; 'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார் | 20 |
பொய்ம் மொழி தேறுவது என்; தெளிந்தேன், தெரியிழாய்! யான்; பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில், அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி, முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை | 25 |
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று, உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண் நல் ஏறு நாகுடன் நின்றன, பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 113, இலக்கியங்கள், மொழி, கலித்தொகை, முல்லைக், கலித்தொகை, யான், கொண்டு, ஏவல், மற்று, எல்லா, எட்டுத்தொகை, சங்க, புல்லினத்து, ஆயர்